Followers

Thursday, February 7, 2013

பங்கு வர்த்தக சோதிட விளக்கம்



வணக்கம் நண்பர்களே !
                     ஒரு நண்பர் என்னை தொடர்புக்கொண்டு பங்குவர்த்தக சோதிடத்தைப்பற்றி கேட்டார். நான் கமாடிட்டி வாணிபம் நடக்கும் அலுவலகத்தில் இருந்ததால் அதனைப்பற்றி தெரியும். அவர் மூலமாக ஒரு செய்தியை உங்களுக்கு கொடுக்கலாம் என்று இறைவன் நினைக்கிறான் என்று நான் நினைக்கிறேன்

இப்பொழுது நான் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு வந்ததால் பணத்தை சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் போய்விட்டது. நமது நண்பர்கள் வட்டமும் இப்பொழுது அனைத்தும் ஆன்மீகவழியில் இருப்பவர்களாக இருக்கிறார்கள். நான் கமாடிட்டியில் இருந்தபோது துள்ளியமாக மார்க்கெட்டை சோதிடம் வழியாக கணிக்கும் திறமை பெற்றுருந்தேன். இப்பொழுது அதனை விட்டுவிட்டு ஆன்மீகம் பக்கமாக வந்துவிட்டேன்.

மதங்களில் உள்ள விசயத்தை பொருள் ஈட்ட பயன்படுத்துவது ஒன்றும் தவறு இல்லை. தாராளமாக பயன்படுத்தலாம். கமாட்டி வாணிபத்தில் சோதிடத்தை பயன்படுத்தும்போது உங்களின் நஷ்டத்தை கண்டிப்பாக தவிர்க்கலாம். அதிகமாக ஆசைபடக்கூடாது. ஒரே நேரத்தில் கோடிஷ்வராக போகிறேன் என்ற கனவுடன் இறங்கினால் நஷ்டம் உங்களுக்கு தான். 

சோதிடத்தில் நல்ல திறமை இருக்கும்போது உங்களால் மார்க்கெட்டை துல்லியமாக கணிக்கமுடியும். இதனை நான் பலமுறை செய்து இருக்கிறேன். சோதிடத்தில் அடுத்த மாதம் இது தான் நடக்கபோகிறது என்று கணிக்கும்போது அடுத்த நிமிடத்தில் இது தான் நடக்கும் என்று கணிப்பது ஒரு பெரிய விசயமே கிடையாது. 

உங்களின் சோதிட அறிவை பெருக்கிக்கொண்டு கமாட்டி வாணிபத்தில் ஈடுபடும்போது ஒரு சாப்ட்வேர் இன்ஜீனியர் சம்பாதிப்பதை விட பல மடங்கு சம்பாதிக்கலாம்.இதனை பங்கு வர்த்தகத்திலும் பயன்படுத்தலாம்.

நான் சோதிடத்தை இந்த பிளாக்கில் எழுதுவதை மட்டும் தான் செய்கிறேன். தனியாக வகுப்பு எடுப்பதில்லை.பங்குவர்த்தக சோதிடத்தைப்பற்றி கற்று தர சில பேர் வகுப்பு எடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களிடம் இதனை கற்றுக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 





No comments: