வணக்கம் நண்பர்களே !
நமது நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு சோதிட பலனை கேட்பார்கள் அப்பொழுது அதற்கான பரிகாரத்தையும் கேட்பார்கள். நான் சொன்னவுடன் அதனை செய்கிறார்கள். இந்த பரிகாரத்தை செய்து முடித்து ஒரு மணி நேரத்தில் எனக்கு போன் செய்து எப்பொழுது நடக்கும் என்று கேட்பார்கள்.
மனிதன் ஒரு செயலை நேரிடையாக செய்தாலே உடனே நடக்காது. கடவுள் மூலம் செய்தால் உடனே நடக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். அதற்க்கும் நாட்கள் தேவை. அதைவிட நமது பூர்வபுண்ணியம் நன்றாக இருக்கவேண்டும். பூர்வபுண்ணியம் பிரச்சினை கொடுத்தால் நமக்கு கெடுதல் நடைபெறும். பரிகார பலன் உடனே நடைபெறாது. காலம் தாழ்த்தி தான் நடைபெறும். நான் கொடுக்கும் பரிகாரம் செயல்படும் ஆனால் அதற்கு நேரம் தேவை.
ஒரு மனிதனுக்கு கொஞ்சம் பணத்தை பார்த்துவிட்டான் என்றால் சும்மா இருக்கமாட்டான். அதுவும் பூர்வபுண்ணியம் கெட்ட மனிதன் அதைவிட மோசமாக இருப்பான். எங்கு சாமியார் இருக்கிறானோ அல்லது சோதிடக்காரன் இருக்கிறானோ அங்கு போய் வம்பு இழுப்பது. அவர்களின் சாபத்தை வாங்கிக்கட்டிக்கொள்வது இப்படி பல பேர் இருக்கிறார்கள்.நீங்கள் எந்த நேரமும் பணம் பணம் என்று எண்ணுகிறீர்கள். அவர்கள் எந்த நேரமும் கடவுள் கடவுள் என்று நினைப்பவர்கள். நீங்கள் நினைப்பது சுயநலம் அவர்கள் நினைப்பது பொதுநலம்.அவர்களுக்கு நீங்கள் தீங்கு இழைக்கும் போது எங்கு போய் பரிகாரம் செய்தாலும் எடுபடாது.
ஒரு சில பேர் இன்னும் கூடுதலாக போய் கோவில் காரியங்களில் தலையிட்டு பிரச்சினையை ஏற்படுத்துவது. மனிதனுக்கு செய்யும் பிரச்சினையை தீர்ப்பதே பெரும் பாடு இதில் கடவுளுக்கு செய்யும் பிரச்சினை எங்கு போய் தீர்ப்பது.
நீங்கள் செய்யும் செயல் அனைத்தையும் நன்றாக யோசித்து செய்யுங்கள் அடுத்தவர்களுக்கு சிறிதும் பிரச்சினையை தரகூடாது என்று எண்ணி செய்ய வேண்டும். நீங்கள் தனி ஆட்கள் கிடையாது உங்களின் குடும்பம் இருக்கிறது சொத்து சேர்த்துக்கூட உங்கள் குடும்பத்திற்க்கு கொடுக்கவேண்டாம் பாவத்தை சேர்த்து உங்களின் குடும்பத்திற்க்கு கொடுத்துவிடாதீர்கள்.பாவத்தை சேர்த்துக்கொடுத்தால் உங்களின் குடும்பத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது
நண்பர்களே நாளை பதிவு வெளியிடமுடியாத சூழ்நிலை இருப்பதால் திங்கள்கிழமையில் இருந்து பதிவு வெளிவரும். நாளை பெங்களுரில் இருப்பேன். பெங்களுரில் என்னை சந்திக்க விரும்பும் நண்பர்கள் நாளை மாலையில் சந்திக்கலாம். Cell no 9551155800.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment