வணக்கம் நண்பர்களே !
பூர்வ புண்ணியபகுதியில் முன்ஜென்மத்தில் என்ன தவறை ஒரு மனிதன் செய்திருப்பார் என்று சோதிடம் வழியாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் ராகு பகவான் மகர லக்கனத்திற்க்கு ஐந்தில் நின்றால் என்ன தவறு செய்திருப்பார் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
மகர லக்கனத்திற்க்கு ஐந்தாவது வீடாக வருவது ரிஷபம் அதன் அதிபதி சுக்கிரன்.
யாரை கெடுத்திருப்பார்?
ராகு பகவானுக்கு சொந்த வீடு கிடையாது எதில் அமருகிறாரோ அந்த வீட்டிற்க்கு காரகன் வகிக்கிறார். ராகுபகவான் முன்ஜென்மத்தில் ஏற்பட்ட பாவத்தை காட்டுவதால் பொதுவாக இதனை எடுத்துக்கொள்ளலாம். பெண் பிள்ளைகளுக்கு கெடுதல் செய்திருப்பார். துணைவருக்கும் கெடுதல் செய்திருப்பார்.
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம் ரோகிணி மிருகசீர்ஷம் 1, 2 ம் பாதங்களை கொண்டது ரிஷப ராசி
அடையாளம்?
ரிஷப ராசியில் கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்களில் ராகு பகவான் அமர்ந்தால்
இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். சத்திரிய ஜாதியில் பிறந்திருப்பார். நடுத்தர உயரமாக இருந்திருப்பார்.
ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் ராகு பகவான் அமர்ந்தால்
இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் வெள்ளை கலரில் இருந்திருக்கலாம். வைசிய ஜாதியில் இருந்திருக்கலாம். குள்ளமானவர்.
ரிஷப ராசியில் மிருகசீர்ஷம் 1, 2 ம் பாதங்களில் ராகு பகவான் அமர்ந்தால்
இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். சத்திரிய ஜாதியில் இருந்திருக்கலாம். குள்ளமானவராக இருந்திருப்பார்.
சுக்கிரன் வீட்டில் ராகு அமர்வதால் அதிகமான காம இச்சையால் பிரச்சினை ஏற்பட்டு கொல்லப்பட்டுருக்கலாம்.
எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?
ரிஷப ராசியில் கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்களில் ராகு பகவான் அமர்ந்தால்
தலையில் தாக்கி கொல்லபட்டுருப்பார்.
ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் ராகு பகவான் அமர்ந்தால்
முகத்தில் அல்லது வயிற்றில் தாக்கி அதன் மூலம் நோய் ஏற்பட்டு இறந்திருப்பார்.
ரிஷப ராசியில் மிருகசீர்ஷம் 1, 2 ம் பாதங்களில் ராகு பகவான் அமர்ந்தால்
கை மற்றும் தோல் பகுதியில் தாக்கி இறந்திருக்கலாம்.
சம்பந்தபட்டவரை தவிர வேறு ஒன்றும் இருக்கமுடியாது. இவ்வளவு அடையாளங்களை கொடுததிருக்கிறேன். அவர் தாக்கப்பட்ட இடத்தில் உங்களுக்கு இப்பொழுது பிரச்சினை ஏற்பட்டு இருக்கும். அவரை எளிதில் அடையாளம் கண்டுக்கொண்டு கரமவினையை குறைத்துக்கொள்ள வழியை பாருங்கள். அப்படி கர்மாவை குறைத்தாலே போதும். உங்களை தேடி ஆண்டவன் வந்துவிடுவார். அப்புறம் என்ன வாழ்க்கை ஆனந்த மயமாகிவிடும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment