Followers

Friday, February 1, 2013

தேர்வில் வெற்றியடைய வழிமுறை பகுதி 1



வணக்கம் நண்பர்களே !
                      வரும் மாதங்களில் பள்ளி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுகள் மாணவ செல்வங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு நிகழ்வாக இருக்கும். ஒரு மாணவருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி கொடுப்பது நமது கடமை. அந்த நோக்கத்தில் என்னால் முடிந்த உதவியை நான் தருகிறேன். இதனை எடுத்துக்கொண்டு உங்கள் பகுதியில் இருக்கும் மாணவர்களுக்கு உதவி செய்யுங்கள்

தேர்வுக்கு படிக்கும் மாணவ செல்வங்களுக்கு அதிக சக்தி தேவைப்படும். அந்த சக்தியை அவர்களுக்கு நாம் எளிய முறையில் உருவாக்கி தருவோம்.

காலையில் எழுந்தவுடன் காலைக்கடனை முடித்துவிட்டு ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி தினந்தோறும் மூச்சுப்பயிற்சி செய்தால் போதும். உங்களின் நினைத்திறனை அதிகரிக்க ஒரு நல்ல வழி இது. இதன் மூலம் உங்களின் தேர்வை எளிதில் வெற்றி அடையலாம்.

தினந்தோறும் காலையில் பத்து நிமிடங்கள் உங்களின் மூச்சை இடது நாசியில் இழுத்து வலது நாசியில் விடுங்கள். இதனை பத்துநாட்கள் மட்டும் செய்யுங்கள் போதும். நீங்கள் அமர்ந்துக்கொண்டு இந்த பயிற்சியை செய்யலாம். அதிக கஷ்டப்பட்டு செய்ய வேண்டாம். தளர்வாக எளிதாக செய்யவும. பத்து நிமிடங்கள் கஷ்டமாக இருக்கிறது என்று நினைத்தால் ஐந்து நிமிடங்கள் செய்யுங்கள். 

நீங்கள் இதனை செய்து முடித்துவிட்டு பத்து நிமிடங்கள் சென்ற பிறகு உங்களின் பாடங்களை படித்து பாருங்கள் எளிதில் உங்கள் பாடங்கள் புரிந்துவிடும். நீங்கள் கடைசிவரை படித்ததை மறக்கமாட்டீர்கள். இதை செய்வதன் மூலம் நீங்கள் களைப்படைய மாட்டீர்கள். 

அடுத்த பகுதியில் மேலும் சில மூச்சு பயிற்சியைப்பற்றி பார்க்கலாம்.

நண்பர்களே இதனை உங்கள் பகுதியில் இருக்கும் மாணவர்களுக்கு உடனே செய்ய சொல்லுங்கள் இதன் மூலம் ஒரு வலிமையான எதிர்காலத்தை நாம் உருவாக்கிவிடலாம். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

prabu said...

idathu nasiyil iluthu valathu nasiyil moochu vitta piraku valathu nasiyil intha payirchiyai seyya vendama

rajeshsubbu said...

//* prabu said...
idathu nasiyil iluthu valathu nasiyil moochu vitta piraku valathu nasiyil intha payirchiyai seyya vendama *//

வணக்கம் நண்பரே நான் சொன்னதை செய்தாலே போதும். பிறகு பார்த்துக்கொள்ளலாம். மூச்சு பயிற்சிக்கு தயார்படுத்துவதற்க்காக இதனை செய்வது. இதிலேயே நல்ல முன்னேற்றம் ஏற்படும்