Followers

Tuesday, February 5, 2013

ஆன்மீக அனுபவங்கள் 62



வணக்கம் நண்பர்களே !

அனைத்து நண்பர்களும் என்னிடம் பேசும்போது தியானத்தை நீங்கள் கற்று தரவேண்டும் இதனைப்பற்றி ஒரு பதிவு கூட போட்டால் போதும் என்று கேட்டார்கள். நாட்டில் இவ்வளவு ஆட்கள் இருக்கும்போது என்னிடம் இதனைப்பற்றி கேட்கிறீர்களே என்று நினைத்துக்கொண்டு நண்பர்களி்ன் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் அல்லவா அவர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க நான் செய்யும் தியானத்தை உங்களுக்கு தருகிறேன்.
                    
முதலில் நான் சிறுவயதில் இருந்து செய்துக்கொண்டு வரும் ஒரு தியானத்தை உங்களுக்கு தருகிறேன். என்னைப்பொருத்தவரை இது தியானம். இந்த தியானத்தை நீங்கள் ஒருமுறை எனக்காக செய்துபாருங்கள் உங்களின் வாழ்க்கையை அப்படியே மாற்றிவிடும்.

மனிதனுக்கும் பூமிக்கும் உள்ள உறவு கூட இப்பொழுது இல்லாமல் போய்விட்டது. பூமியை முடிந்தளவு மனிதன் அசுத்தமாக்கிவிட்டான். நீங்கள் வெறும்கால்களால் நடக்கும்போது உங்களுக்கும் பூமிக்கும் ஒரு உறவு இருக்கும். இந்த உறவு இப்பொழுது இல்லை. வெறும் கால்களால் நடந்தால் உடனே இன்றைய காலகட்டத்தில் நோய்வந்துவிடும். 

பூமிக்கும் நமக்கும் இருக்கும் உறவால் என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம். இன்றைய காலகட்டத்தில் பூமியில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அதனை வீட்டில் உள்ள நாய்களால் உணரும்போது நம்மால் உணரமுடியவில்லை என்றால் என்ன அர்த்தம். நாய்களுக்கும் பூமிக்கும் உள்ள உறவு நல்லவிதமாக இருக்கிறது.

மனிதன் செருப்பை அணிந்து பூமிக்கும் நமக்கும் உள்ள உறவை முறித்துவிட்டான். அதனால் நம்மால் கண்டுபிடிக்கமுடியவில்லை. வெளியில் ஒரு செருப்பு, வீட்டில் ஒரு செருப்பு என்று மாற்றி மாற்றி அணிந்துக்கொண்டு அவன் பூமியை தொட்டுக்கூட பார்ப்பதில்லை. பூமியில் ஏதாவது ஒரு மாற்றம் நிகழ்ந்தால் உடனே அவனால் கண்டுபிடிக்கமுடியவில்லை. 

அதைப்போல் வீட்டில் படுப்பது கூட கட்டில் வந்துவிட்டது அவன் பூமியை தொடுவது இல்லை. பின்பு எப்படி நாம் பூமியின் மொழியை நாம் கண்டுக்கொள்வது. உன்னை சுமக்கும் இந்த பூமி ஏதாவது ஆபத்துவந்தால் கண்டிப்பாக அது காட்டிக்கொடுத்துவிடும். 

நீங்கள் நடக்கும் போது கூடு அதனை ஏதோ என்று திடு திடு என்று நடப்பது. ஒரு சிலர் நடப்பதை பார்த்தால் அடுத்த ஊருக்கு சத்தம் கேட்கும். அந்தளவுக்கு சத்தத்தின் அளவு இருக்கும். இப்படி எல்லாம் நடக்ககூடாது. உன்னை சுமக்கும் பூமியை நீ மிதிப்பது கூட மெதுவாக தான் மிதிக்கவேண்டும். நான் எனது நண்பர்களிடம் சொல்லுவேன். பூமியை மதித்து நட மிதித்து நடக்காதே என்று தான் சொல்லுவேன். 

தியானம்

1.Earth Meditation

நீங்கள் படுக்கையில் இருந்து எழுந்தவுடனே உங்களின் கையை கீழே தரையில் தொட்டு என்னை சுமக்கும் தாயே உனக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று சொல்லுங்கள் சும்மா மனதிற்க்குள் சொல்லுங்கள். செய்துவிட்டு பாருங்கள் .அன்றைய நாள் முழுவதும் உங்களின் உடலில் ஏதோ ஒன்று நிகழும்.

உலகத்திலேயே மிகப்பெரிய தியானம் இது தான். ஒரு முறை இந்த தியானத்தை செய்துவிட்டு எனக்கு போன் செய்து சொல்லுங்கள் பார்க்கலாம். இப்படி பட்ட தியானத்தை முதலில் நான் உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


4 comments:

KJ said...

Yes sir. Its truth..

ISMAIL said...

இந்த தியானத்தில் ஒரு சிறு மாறுதலுடன் நான் செய்து வருகிறேன். இது சரகலை அடிப்படையாக கொண்டது. காலையில் விழித்ததும் முதலில் நமது மூச்சை சுமார் ஐந்து நிமிடம் கவனிக்கவேண்டும். மூச்சுக்காற்று வலது மூக்கில் வருகிறதா, இடது மூக்கில் வருகிறதா என்று கவனித்துவிட்டு படுக்கையை விட்டு இறங்கும் போது வலது மூக்கில் மூச்சு வந்தால் வலது காலை முதலில் தரையில் ஊன்றி எழவேண்டும். இடது மூக்கு என்றால் இடது காலை முதலில் தரையில் ஊன்றி எழவேண்டும்.

rajeshsubbu said...

//*KJ said...
Yes sir. Its truth.. *//
தங்கள் வருகைக்கு நன்றி

rajeshsubbu said...

//* ISMAIL said...
இந்த தியானத்தில் ஒரு சிறு மாறுதலுடன் நான் செய்து வருகிறேன். இது சரகலை அடிப்படையாக கொண்டது. காலையில் விழித்ததும் முதலில் நமது மூச்சை சுமார் ஐந்து நிமிடம் கவனிக்கவேண்டும். மூச்சுக்காற்று வலது மூக்கில் வருகிறதா, இடது மூக்கில் வருகிறதா என்று கவனித்துவிட்டு படுக்கையை விட்டு இறங்கும் போது வலது மூக்கில் மூச்சு வந்தால் வலது காலை முதலில் தரையில் ஊன்றி எழவேண்டும். இடது மூக்கு என்றால் இடது காலை முதலில் தரையில் ஊன்றி எழவேண்டும். *//

தங்கள் வருகைக்கும் தங்களின் கருத்துக்கும் நன்றி