Followers

Thursday, February 14, 2013

காதலர் தின நல்வாழ்த்துங்கள்



வணக்கம் நண்பர்களே!
                    ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் நன்றாக இருந்து சுக்கிரன் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்கள் விரும்பும் வாழ்க்கை துணை அமையும். அவர்கள் விரும்பி நபர்களை மணக்கும் யோகம் வரும். ஏழாம் வீட்டு அதிபதியும் நல்ல நிலைமையில் இருந்தால் கூடுதல் சிறப்பு.

ஒருவர் காதலித்தால் கண்டிப்பாக அவரை மணக்க முயற்சி செய்யுங்கள். காதல் செய்த பிறகு ஜாதகத்தில் அந்த தோஷம் இருக்கிறது என்று விலக முயற்சி செய்யாதீர்கள். என்னிடம் சோதிடம் பார்க்க நிறைய காதலர்கள் வருகிறார்கள் அவர்களிடம் நான் சொல்லுவது காதல் செய்த பிறகு ஏன் சோதிடத்தை பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும். உங்களை இருவரையும் சேர்த்தது அந்த கடவுள் தான் அவனை நம்பி திருமணம் செய்துக்கொள்ளுங்கள். 

ஒருவருக்கு பூர்வபுண்ணியம் கெடும்போது அவர்கள் காதலில் அதிகமாக விழுந்துவிடுவார்கள். இவர்கள் காதலும் ஜெயிக்காது. அதே போல் பாக்கிய ஸ்தானம் எனும் ஒன்பதாவது கெடும்போதும் அவர்கள் காதலில் ஈடுபட்டு தோல்வியை சந்திப்பார்கள். இவர்கள் ஏற்கனவே செய்த கர்மத்தை தொலைக்க அந்த பாடுபட்டுக்கொண்டு இருக்கும்போது இதில் கூடுதலாக கர்மத்தை ஏற்றிக்கொள்கிறார்கள்.

ஒருவர் காதலித்து அவர்களை கைவிட்டு அவர்களின் மனதை புண்படுத்துவதில் இவர்களின் பங்கு அதிகமாக இருக்கும். நீங்கள் காதலித்து தோல்வியை சந்தித்தால் கண்டிப்பாக பூர்வபுண்ணியம் கெட்டு இருக்கும். உங்களின் ஜாதகத்தை எடுத்து பாருங்கள் அல்லது உங்களின் காதலர்/ காதலின் ஜாதகத்தில் தெரியவரும்.

உலகத்தில் நடக்கும் முக்கால்வாசி பாவம் மனதால் தான் நடைபெறுகிறது. காதல் செய்யும்போது மனதின் பங்கு அதிகம். மனதால் பாவத்தை செய்யாதீர்கள். நீங்கள் விரும்புவர் எப்படியாவது இருந்துவிட்டு போகட்டும். அவர்களோடு சந்தோஷமாக வாழகற்றுக்கொள்ளுங்கள். காதல் திருமணம் செய்யும்போது பலவிதத்திலும் தடை ஏற்படதான் செய்யும். என்ன தான் நாகரீக உலகம் என்றாலும் முக்கால்வாசி ஜென்மங்கள் இன்றும் திருந்தவில்லை தான்.பயந்து ஒதுங்கிவிடாமல் அனைத்தையும் வெல்லுங்கள்

நண்பர்களே நீங்கள் காதல் செய்தால் அவர்களேயே திருமணம் செய்துக்கொள்ளுங்கள். இருவீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்துக்கொள்ளுங்கள். அனைவருக்கும் காதலர் தின நல்லவாழ்த்துக்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

dreamwave said...

காதலர் தின நல்வாழ்த்துங்கள்- ungaluku

BABU - VELLORE

rajeshsubbu said...

//*காதலர் தின நல்வாழ்த்துங்கள்- ungaluku

BABU - VELLORE *//

வருக வணக்கம். நன்றி sir