Followers

Wednesday, February 20, 2013

மேஷம் : ஐந்தில் குரு


வணக்கம் நண்பர்களே !
                     மேஷ ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு குரு ஐந்தில் அமரும் போது முன்ஜென்மத்தில் அவர் என்ன செய்திருப்பார் என்று பார்க்கலாம்.

குரு கிரகம் ஐந்தில் அமருகிறார். குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும். இவர் நட்போடு அமருகிறார் என்பதால் இவர் முன்ஜென்மத்தில் கெடுதல் செய்திருக்கமாட்டார் என்று எண்ணக்கூடாது. மனித ஜென்மம் கர்மாவை குறைக்க தான் பிறப்பு எடுக்கிறது என்ற நோக்கத்தில் அலசப்பட்ட விசயங்களை உங்களுக்கு தருகிறேன்.

சிம்மம் சூரியனின் வீடு சூரியன் சிவனை காட்டும் கிரகம் மற்றும் குருவும் சிவனை தான் காட்டுவார். நான் பல ஜாதகங்கள் பார்க்கும் போது சிவன் கோவிலுக்கு கெடுதல் செய்திருப்பார் என்று நினைத்தால் அதற்கு என்னுடன் இருக்கும் சக்தி அதை சொல் என்று ஏற்றுக்கொள்ளும் அந்த வழியில் பார்த்தாலும் கோவிலுக்கு தான் இவர் கெடுதல் செய்திருப்பார் என்று தோன்றும். கோவிலில் இருப்பவர்களுக்கும் இவர் கெடுதல் செய்திருப்பார். அந்த கோவில் சம்பந்தப்பட்ட நபர்களோடு பிரச்சினை செய்திருப்பார் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?

குரு நல்ல அறிவை உங்களுக்கு கொடுத்திருப்பான். அந்த அறிவை தவறாக பயன்படுத்தி அவனுக்கு தொந்தரவு செய்திருப்பீர்கள். ஒருவரை முன்ஜென்மத்தில் கெடுக்கும்போது  பிற கிரகங்களாக இருந்தால் அவரை நீங்கள் தாக்கப்பட்ட இடம் அவரது வீடாக இருக்கலாம் அல்லது வெளியிடங்களில் தாக்கியிருப்பீர்கள். ஆனால் குரு கிரகமாக இருந்தால் குரு என்பது கோவிலை காட்டக்கூடிய கிரகம் என்பதால் கோவிலில் அவரை தாக்கும்போது அவரின் ஆத்மா மட்டும் இல்லாமல் கோவிலில் உள்ள சக்தியின் கோபத்திற்க்கும் நீங்கள் ஆளாக வேண்டும் என்பதால் பூர்வபுண்ணிய பாதிப்பு அதிகமாக இருக்கும்.

நீங்கள் எந்த இடத்தில் அவரை தாக்கியிருப்பீர்கள் ?

சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால் 

கை அல்லது தோள் போன்ற இடத்தில் தாக்கி இருக்கலாம்.

சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால்

மர்மஸ்தானத்தில் பிரச்சினையை கொடுத்திருக்கலாம்.

சிம்ம ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால்

தலையில் தாக்கப்பட்டுருக்கலாம்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால் 

உங்களின் வீட்டில் இருந்து வடமேற்க்கில் இருப்பார். 

சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து தென்கிழக்கு திசையில் இப்பொழுது வசிப்பார்.

சிம்ம ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து கிழக்கு திசையில்  இப்பொழுது வசித்து வருவார்.  

மேலும் விளக்கம்

குரு கிரகம் சிவன் கோவிலை அதிகமாக காட்டக்கூடிய ஒரு கிரகம். நீங்கள் சிவன் கோவில் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுது நீங்கள் கோவில் தரிசனம் முடித்துவிட்டு நேராக வீட்டிற்க்கு வரவேண்டும் வேறு இடத்திற்க்கு செல்லகூடாது. ஏன் அவ்வாறு செல்லகூடாது என்றால் சிவன் சிவகணங்களை நம்மோடு வீட்டிற்க்கு அனுப்புவார் அதனால் நேராக வீட்டிற்க்கு நாம் செல்லவேண்டும். ஒரு நபர் அவரை தரிசனம் செய்தற்க்கே  சிவகணங்களை அனுப்புவர். அந்த நபரை நாம் தாக்கினால் எதை அனுப்புவார் என்று உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். சிவன் கோவிலையோ அல்லது சிவனை வழிபடுபவர்களை நீங்கள் தாக்கும்போது அந்த சர்வேஸ்வரனின் அக்னி பார்வை நம்மீது விழுந்துவிடும். 

ஒருவருக்கு ஐந்தில் குரு அதுவும் சூரியனின் வீடான சிம்மத்தில் அமரும்போது சிவனால் ஏற்பட்ட சாபம் உங்களை தாக்குகிறது என்று அர்த்தம்.

பரிகாரம்

சிவன் அபிஷேக பிரியர் என்பது உங்களுக்கு தெரியும். அவரை வியாழக்கிழமை தோறும் அபிஷேகம் செய்து வழிபட்டு வாருங்கள். ஞாயிறு அன்று சிவனை வழிபாடு மட்டும் செய்து வாருங்கள்.சரியான நபரை அவர் உங்களுக்கு அடையாளம் காட்டுவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

தனி காட்டு ராஜா said...

For Mesha Lagna...9th lord is Sitting in 5th. How do you say "it is Paavam"?

For doing good things in his previous birth,the Guru may sit in 5th place..right?

The karma might occcur because of doing Good thing or bad thing...right?

It vanishes only when U surrender God...I think so...What do u think?


rajeshsubbu said...

// * கிருஷ்ணா said...
For Mesha Lagna...9th lord is Sitting in 5th. How do you say "it is Paavam"?

For doing good things in his previous birth,the Guru may sit in 5th place..right?

The karma might occcur because of doing Good thing or bad thing...right?

It vanishes only when U surrender God...I think so...What do u think? *//
வணக்கம் பதிவில் விடை அளிக்கிறேன். நன்றி.