வணக்கம் நண்பர்களே!
நாம் பூர்வபுண்ணியத்தைப்பற்றி பார்த்து வருகிறோம். அதில் கர்மவினையை பற்றி பார்த்தோம் அல்லவா. நீங்கள் அனைவரும் சோதிடர்கள் நீங்கள் ஜாதகம் பார்க்கும்போது ஒரு ஜாதகம் வந்தால் உடனே எடுத்து கணக்குபோட்டு நீங்கள் படித்து வைத்திருக்கும் பலனை அப்படியே சொல்லிவிடுவீர்கள். அப்படி சொல்லுவது கூடாது.
ஒரு ஜாதகத்தை எடுத்தோம் என்றால் சுற்றி என்ன நடக்கிறது என்று பார்த்து பலனை சொல்லவேண்டும். கணக்கை விட சுற்றி நடக்கும் சூழ்நிலை அதிகமாக உணர்த்தும். பலன் கேட்க வந்தவர்கள் திருமணம் நடக்குமாக என்று கேட்டாள். நீங்கள் கணித்து பார்த்துக்கொண்டிருப்பீர்கள். அப்பொழுது யாராவது ஒருவருடை செல்போனில் மணி அடித்தால் நீங்கள் நடக்கும் என்று சொல்லிவிடலாம். அது அப்படியே நடந்துவிடும்.
ஒரு ஜாதகத்தை கையில் எடுக்கும்போதே உங்களின் உடலில் மாறுதல் ஏற்படும். அவர்களின் கர்மா உங்களை தாக்கும். ஒரு சில ஜாதகங்களை பார்க்கும்போது நாள் முழுவதும உடல் வலி ஏற்படும் அது ஏன் என்றால் அவர்களின் ஜாதகத்தின் கர்மாவின் தாக்குதல் உங்களுக்கு வருவதால் அப்படி நடக்கிறது. இதை ஒன்றை வைத்தே கர்மாவை தொலைக்க தான் ஒருவன் மனித பிறப்பு எடுத்து இருக்கிறான் என்று நாம் நம்பலாம்.
ஒரு சிலருக்கு நான் சோதிடம் பார்க்கும்போது பரிகாரம் கேட்பார்கள் நான் சிந்தனை செய்து சொல்லுகிறேன் என்று சொல்லி அனுப்பிவிடுவேன். எனது நண்பர்கள் எல்லாம் ஏன் இப்படி சொல்லுகிறாய் எப்படி வாடிக்கையாளர் வருவார்கள் ஏதாவது சொல்லவேண்டியது தானே என்பார்கள். கர்மாவின் வினையை அவன் அனுபவிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. நான் சொல்லி அந்த கர்மாவை நான் வாங்கிக்கொள்ள வேண்டியதில்லை என்று சொல்லுவேன்.
நீங்கள் ஜாதகம் பார்க்கும்போது கூட இவ்வாறு அனைத்தையும் பார்த்து பலனை சொல்ல ஆரம்பியுங்கள். சும்மா அனைத்து விதிகளையும் படித்துவிட்டு நாம் கடவுள் மாதிரி நினைத்துக்கொண்டு பலனை சொல்ல நினைக்காதீர்கள்.
சோதிடம் பார்ப்பது ஒரு மோசமான வேலை தான். நமது ஆத்மா நல்ல சக்தியுடன் இருந்தால் மட்டுமே சோதிடம் பார்ப்பதால் எந்த பிரச்சினையும் நமக்கு ஏற்படாது. சக்தியை கூட்டுவதற்க்கு பல வேலைகளை நீங்கள் செய்யவேண்டும். அப்பொழுது மட்டுமே சோதிடம் சாத்தியப்படும்.அனைத்தும் கர்மாவை வைத்து தான் நடைபெறுகிறது
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
கர்மவினை என்று சொல்லி முன் ஜென்மத்து நபர்களை தேட சொல்லுகிறீர்கள் ?
உங்கள் லாஜிக் படி பார்த்தால் கசாப்பு கடை காரன் கடவுளை அடையவே முடியாது போல இ ருக்கிறதே :)
கசாப்பு கடை காரன் ஆட்டை வெட்டுகிறான் என்றால் அந்த கர்மா யாரை சேரும் ?
கசாப்பு கடைகாரனையா? ஆடு வளர்தவனையா? ஆட்டை விலைக்கு வாங்கி விற்றவனையா ?மட்டன் ஆக்கி சாப்பிட்டவர்களையா?
சரி இறந்த ஆடு கிருஷ்ணா வாகவோ இல்லை ராஜேஷ் சுப்பு வாகவோ பிறவி எடுத்து விட்டது என்று வைத்து கொண்டால் ....நெறைய பேர் நம்மை தேடி வந்து பரிகாரம் செய்ய வேண்டி இருக்குமே :)
சரி சித்தார்த்தன் என்பவன் நடு இரவில் தன் பொண்டாட்டி பிள்ளை களை விட்டு விட்டு ஓடி மகா பாவம் செய்தானே அவன் எப்படி ஞானம் பெற்று புத்தன் ஆனான் ? பாவி அல்லவா ஆகி இருக்க வேண்டும் ??
வால்மிகி என்ற பாவி வேடன் எப்படி முனிவன் ஆனான் ?
பாவம் என்றால் சிங்கம் புலி க்கு இறைவன் எதை உணவாக படைத்தான்?
புல் செடி கொடி க்கு கூட உயிர் உள்ளதே ?
சுவாசிக்கும் போது கோடிக்கணக் காண பாக்டிரியாகள் இறகின்றன தெரியுமா ?
மனிதன் பாவத்தை தவிர வேறு ஒன்றும் செய்வதில்லை .....ஹ ஹ ஹா
கர்மா என்பது குறிப்பிட்ட நபர் சார்ந்தது அல்ல ?
கோபத்தால் ஒருவரய் நீங்கள் திட்டி காயபடுத்தினால்..... அந்த நபரை நீங்கள் தேடுவது வெட்டி வேலை ............ கோபம் எங்கே இருந்து வருகிறது என்று பாருங்கள் .....அது தான் பரிகாரம் ............ ஏன் என்றால் நீங்கள் கோபத்தால் ஆயிரம் பேரை மனதால் கொன்று இருக்கலாம் ......... ஆயிரம் பேரை தேடுவது வீண் வேலை .........கோபத்தை வெல்வது தான் முதல் வேலை :)
நீங்கள் சொல்லுவது போல சில முன் ஜென்ம உறவுகள் நம்மை தொடரும் என்பது உண்மைதான் .......12 வருடத்துக்கு மேல் ஒரு உறவு தொடர்ந்தால் அது முன் ஜென்ம உறவாகா இருக்கலாம் ...... :)
Post a Comment