வணக்கம் நண்பர்களே!
செவ்வாய் ஐந்தில் நின்றால் என்ன தவறை முன் ஜென்மத்தில் ஒருவர் செய்திருப்பார் என்று ஒவ்வொரு ராசிக்கும் இனி பார்க்கபோகிறோம்.
சனி மற்றும் ராகுவைப்பற்றி ஐந்தில் நின்றால் முன்ஜென்ம பாவம் என்ன என்று தெரிந்துக்கொண்டீர்கள். அடுத்தாக கேதுவை எடுக்காமல் செவ்வாய் கிரகத்தை எடுத்துள்ளேன். கேதுவைப்பற்றி பின்பு பார்க்கலாம்.
செவ்வாய் கிரகம் ஒரு போர்குணத்தை காட்டும் கிரகம். இவர் ஐந்தில் நின்றால் எவ்வித சந்தேகமும் இல்லாமல் நாம் சொல்லிவிடலாம் இவர் முன்ஜென்மத்தில் வில்லங்கமானவர் என்று கூறிவிடலாம்.பொதுவாக ஐந்தில் செவ்வாய் இருக்கும் ஆட்களை கண்டால் கொஞ்சம் விலகியே நிற்பது நல்லது அந்தளவுக்கு மோசமானவர்கள் என்று சொல்லுவது உண்டு.இவர்கள் முன்ஜென்மத்தில் கண்டிப்பாக தீங்கு செய்திருப்பார்கள் என்று உறுதியாக நாம் சொல்லலாம்.
பொதுவாக ஐந்தாவது வீட்டைப்பற்றி நாம் பார்க்கும்போது அந்த வீட்டிற்க்கு பார்வை செலுத்தும் கிரகங்களைப்பற்றியும் நாம் பார்க்கவேண்டும். மற்ற கிரகங்களின் பார்வை அந்த வீட்டிற்க்கு கிடைப்பதால் அந்த வீட்டின் பலன் கொஞ்ச குறைய வாய்ப்பிருக்கிறது. மற்றப்படி நடந்தது நடப்பது எல்லாம் சரியாகதான் இருக்கும்.
ஐந்தாவது வீட்டு அதிபதியி்ன் நிலையையும் ஆழ்ந்து கவனிக்கும்போது இன்னும் அதிகபடியான தகவல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இப்பொழது இந்த தகவல் வைத்து பார்த்தாலே போதும். முதல் தகவல் சரியாக தான் இருக்கும். அதனை தொடர்ந்து பார்வை மற்றும் அதிபதியின் நிலை முதல் தகவலை உறுதிப்படுத்தும்.
செவ்வாய் கிரகம் ஒரு போர்கிரகம் என்பதால் வெட்டுக்காயத்திற்க்கு பஞ்சம் இருக்காது. இரத்ததிற்க்கும் பஞ்சம் இருக்காது.முடிந்தளவு உங்களுக்கு புரியும்படி நான் தருகிறேன். உங்களின் ஜாதகத்தை வைத்து தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தவாறு செயல்படுங்கள்.
நான் எழுதுவதையும் கோபத்தோடு பார்க்காமல் உங்களுக்குள்ள பிரச்சினையை சரிசெய்ய ஆரம்பியுங்கள்.தொடர்ந்து பார்க்கலாம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
excellent if u can give everything in a day it will be very helpful. we r eagerly waiting plz romba suspense vaikaadheenga adhuku yedhavadhu pariharam pannanuma .thanks sir
//*rangachari said...
excellent if u can give everything in a day it will be very helpful. we r eagerly waiting plz romba suspense vaikaadheenga adhuku yedhavadhu pariharam pannanuma .thanks sir *//
வணக்கம் சார் கருத்துக்கு நன்றி பூர்வபுண்ணியத்தை பொருத்தவரை பரிகாரம் செய்வது எல்லாம் இரண்டாம் பட்சம் தான் சார். நம்ம ஆளுங்க பரிகாரம் என்று சொல்லி சொல்லி கர்மாவை கூட்டிக்கொண்டே செல்லுகிறார்கள் அதனால் தான் இப்படி சொல்லுகிறேன். சம்பந்தப்பட்ட ஆள் கண்டிப்பாக கிடைப்பார் சார். நான் பரிகாரம் சொல்லுவது என்றால் ஆயிரம் பரிகாரத்தை சொல்லிவிடலாம் அதனால் நன்மை ஏற்படபோவதில்லை.
Post a Comment