Followers

Sunday, November 3, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 65


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசாவைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம். ராகு ஒருத்தருக்கு ஆறாவது வீட்டில் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். ஆறாவது வீடு என்பது அதிகபலம் பெற்றும் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அந்த நபர் அரசியல்வாதியாக இருந்து அந்த நபருக்கு ராகு தசா ஆரம்பித்து அரசியலில் பதவியை கொடுத்தால் நாட்டில் உள்ள பொதுச்சொத்து அனைத்தையும் தன்சொத்தாக மாற்றிவிடுவார்.

ஆறாவது வீட்டில் ராகு அமர்ந்து தசா நடைபெறும் பொழுது அவர் மிகுந்த செல்வாக்குடன் உயருவார். நான் சொல்லுவது தவறான அரசியல்வாதியாக அவர் இருந்தால் மட்டுமே அவ்வாறு உயரமுடியும். நேர்மையான அரசியல்வாதிக்கு ஆறாவது வீட்டில் உள்ள ராகுவின் தசா ஏற்றத்தை கொடுக்காது. நேர்மை என்று பேசினால் எப்படி சம்பாதிக்கமுடியும். அதாவது திருடுவதற்க்கு வழியை ராகு தந்துவிடுவார்.

நேர்மை இல்லாத அரசியல்வாதியாக இருந்தால் மட்டுமே ஆறாவது வீட்டில் உள்ள ராகுவால் உயரமுடியும். இவர்கள் செய்வதை பார்த்தாலே ராகுவின் கைவண்ணம் தெரியும். பார்ட்டி வைப்பது அதில் மதுவை கொடுப்பது. ஒரு சிலர் அதிகமாக காமத்தில் ஈடுபடுத்தி அவர்களை இவர்களின் போக்குக்கு மாற்றுவது என்று சினிமா வில்லன்கள் போல் செயல்படுவார்கள். உங்களின் ஊரில் உள்ளவர்களில் உள்ள அரசியலவாதியை பார்த்தாலே தெரியும். இவர்கள் ராகுவின் கீழ் இருக்கின்றனர் என்று தெரியும்.

ராகுவின் தசாவில் இவர்கள் அடிக்கும் கொள்ளை பணத்தை கண்டுபிடிப்பதே கடினமாக தான் இருக்கும்.அப்படி ஒரு மாஸ்டர் பிளான் போட்டு சுவிஸ் வங்கியில் எல்லாம் கொண்டு போட்டுவிட்டு வந்துவிடுவார்கள். அயல்நாட்டை குறிக்கும் கிரகம் ராகு என்பதால் அயல்நாட்டில் அதிகமுதலீடு செய்வார்கள்.

ஒரு சிலர் பிற மதங்களில் உள்ளவர்களை பினாமி போல் போட்டு சொத்தை அவர்களின் பேரில் சேமித்துவிடுவார்கள். இது எல்லாம் நடைபெறுவது ஆறாவது வீட்டில் ராகு அமர்ந்து தசா நடக்கும்பொழுது நடைபெறும்.ஆறாவது வீட்டில் ராகு தசா நடைபெறும்பொழுது திருட்டுதனத்தை அதிகம் தரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: