வணக்கம் நண்பர்களே !
சனியின் கடுமையான பிடியில் இருப்பவர்களுக்கு ஆஞ்சநேயருக்கு வெண்ணைகாப்பு செய்ய சொல்லி இருந்தேன். அப்படி ஆஞ்சநேயருக்கு வெண்ணைகாப்பு செய்யும்பொழுது உங்களின் வசதியை பொருத்து செய்துக்கொள்ளுங்கள்.
வசதி குறைவாக இருந்தால் சிறிய சிலையாக பார்த்து செய்துக்கொள்வது நல்லது. பெரிய சிலைக்கு செய்யவேண்டும் என்றால் உங்களுக்கு செலவு அதிகமாக போய்விடும் என்பதால் சிறிய சிலைக்கே செய்துக்கொள்வது நல்லது.
ஆஞ்சநேயருக்கு வெண்ணைகாப்பு செய்யமுடியவில்லை என்றால் வெற்றிலை மாலையாவது போடுங்கள். நல்லது. நம்மால் முடிந்ததை தான் செய்யவேண்டும். கடன் வாங்கி செய்யகூடாது.வெற்றிலைக்கு கூட நமது நண்பர்கள் என்னிடம் சந்தேகம் கேட்டார்கள். வெற்றிலையில் பாக்கு வைத்து கட்டவேண்டுமா என்றார்கள். அது எல்லாம் தேவையில்லை. வெறும் வெற்றிலை வைத்து மாலை கட்டி போடுங்கள்.
ஒரு சில நண்பர்கள் வாரம்வாரம் வெண்ணைகாப்பு செய்ய வேண்டுமா என்று கேட்டார்கள். வாரம்வாரம் செய்யவேண்டியதில்லை ஒரு வாரம் வெண்ணைகாப்பு செய்யுங்கள். வாரம்வாரம் முடிந்தால் வெற்றிலைமாலை அல்லது ஒரு தீபம் ஏற்றி வழிப்பட்டு வரலாம்.
நாளை சனிக்கிழமை இதுவரை செய்யாத நபர்கள் நாளை செய்துவிடுங்கள். பல நண்பர்கள் என்னிடம் சொல்லிருந்தார்கள் செய்யமுடியவில்லை என்று அதனை செய்யவிடாமல் சனிபகவான் தடைசெய்கிறார். நாளை எப்படியும் செய்துவிடவேண்டும் என்று இன்றே தயார்படுத்திக்கொண்டு குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு சனிக்கிழமை சென்று செய்துவிடுவது நல்லது.
மீனம், மேஷம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம் போன்ற ராசியை உடையவர்கள் மற்றும் அதிகமாக சனியின் பாதிப்பு இருக்கின்றது என்று நினைப்பவர்கள் இதனை செய்யலாம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
Dear sir,
Thank you for your kind information.
In Sucindram, Near kanyakumari the big Temple with one big "ஆஞ்சநேயர் . 22 Feet.
One of the guide in the temple tell us this ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்படல.
Please explain this Sir.
Thanks
Antony
Post a Comment