வணக்கம் நண்பர்களே!
பல வயதானவர்களோடு பேசும்பொழுது பல பேர் அவசரப்பட்டு பேசுகிறார்கள். பொறுமையாக பேசுவதில்லை. உடனே கோபம் வருகிறது.
இளம்வயதில் கோபம் வருவது சரி வயதாகிவிட்ட பிறகு ஏன் கோபம் வரவேண்டும். ஏதோ அவர்களுக்குள் ஒரு தவிப்பு இருக்கதான் செய்கிறது அதற்காக அனைவருரிடமும் கோபபட வேண்டியதில்லை. ஒழுங்கான நிலையில் நீங்கள் வளரவிலலை என்றே தெரிகிறது. ஆன்மீகபக்கம் சென்றதே இல்லை என்று தோன்றுகிறது.
வயதானவர்கள் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கபடதான் செய்யவார்கள். வயதானவுடன் அதனைப்பற்றி கண்டுக்கொள்ளகூடாது. அனைத்தையும் ஏற்க்கும் பங்குவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். யாரையும் புண்படுவது மாதிரி பேசிவிடகூடாது. ஒரு சில பெரியவர்களை நான் பார்த்திருக்கின்றேன். தகாத வார்த்தைகளில் குடும்பத்தில் உள்ளவர்களை திட்டுவார்கள்.ஏன் திட்டுகிறார்கள் என்றால் ஏதோ ஒரு காரணத்தால் திட்டுவார்கள்.
நான் அனைவரையும் சொல்லவில்லை ஒரு சிலர் இப்படி இருக்கின்றார்கள். இப்பொழுது பல பேர் சொல்லுவார்கள் முதியோர் இல்லங்கள் அதிகமாகிவிட்டது. ஒரு பிள்ளையையும் தாய் தகப்பனை கவனிக்கவில்லை என்று சொல்லுவார்கள். உண்மையில் தாய் தகப்பன் முன்னால் செய்த தவறுக்கு இந்நாளில் அவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றே எனக்கு தோன்றுகிறது. இளம்வயதாக இவர்களின் பிள்ளைகள் இருந்தபொழுது ஆன்மீகத்தைப்பற்றி சொல்லிக்கொடுத்திருந்தால் இவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்குமா?
ஆன்மீகத்தின் அடிவேரை தாய் தந்தை குரு கடைசியில் தான் தெய்வம் என்று வைத்தார்கள். ஆன்மீகத்தை கற்று தரும்பொழுது அம்மா அப்பாவை மதிக்கும்பொழுது நல்ல குரு உனக்கு அமைவார். குரு வழியாக தெய்வம் காட்சியளிக்கும். அம்மா அப்பாவை என்று மறந்தாயோ அன்று நீ அனைத்தையும் இழப்பாய் என்று சொல்லிக்கொடுத்து இருந்தால் உங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. தவறு உங்களுடையது. பின்பு கத்திக்கொண்டு இருப்பது ஒன்றும் பிரயோசனம் இல்லை.
இதனை படிக்கும் உங்களுக்கும் இந்த நிலை ஏற்படலாம். அதனால் இளம்வயதில் ஆன்மீகத்தை கற்றுக்கொடுத்துவிடுங்கள். அப்படி கற்றுக்கொடுத்துவிட்டால் முதியோர் இல்லங்களை தேடி நீங்கள் செல்லவேண்டியதில்லை. இளம்வயதில் ஆன்மீகத்தை சொல்லிக்கொடுத்தால் நாட்டில் முதியோர் இல்லங்கள் உருவாகாது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment