வணக்கம் நண்பர்களே!
பயணங்களை முடித்துவிட்டு இன்று சென்னை வந்துவிட்டேன். தொடர்ந்து பார்க்கலாம். குரு தசா பல நண்பர்களுக்கு நடைபெறுகிறது என்று நினைக்கிறேன். ஏகாப்பட்ட போன்கால்கள் மற்றும் மெயில்கள் வருகின்றன். உங்களின் சந்தேகங்களுக்கு பதிவு வழியாக அனைவரும் பயன்பெறும் வகையில் தருகிறேன்
முதலில் குரு தசா ஒருவருக்கு நடைபெற்றால் அவர்கள் கண்டிப்பாக உணவு பழக்கவழக்கத்தை மாற்றவேண்டும். முடிந்தவரை சைவ உணவு வகைகளை விரும்பி உண்ணுங்கள். பிராமணர்கள் இல்லாதவர்களுக்கு குரு தசா நடைபெறும்பொழுது உணவால் பிரச்சினை ஏற்படுத்தும். சாப்பிடும் உணவு ஜீரணம் ஆகாது.
பொதுவாக குரு ஆறாவது வீட்டில் இருந்தால் ஜீரணத்தில் பிரச்சினை ஏற்படும். குரு எந்த வீட்டில் இருந்தாலும் குரு தசாவில் இந்த பிரச்சினையை சந்திக்க நேரிடும். ராகு தசாவில் இவர்கள் இஷ்டத்திற்க்கு வாரத்தில் ஏழு நாட்களும் அசைவம் சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். குரு தசாவில் இந்த பழக்கத்தை மாற்றவே ஜீரண பிரச்சினையை ஏற்படு்த்தி விடுவார்.
நீங்களே சாப்பாட்டை குறைக்க வேண்டிய நிலையை ஏற்படுத்திவிடுவார்.ஏன் சாப்பாட்டில் கை வைக்கிறார் என்றால் உங்களுக்கு சிந்திக்கும் திறனை அதிப்படுத்துவார். வயிறுமுட்ட சாப்பிட்டால் என்ன நடக்கும் நன்றாக தூக்கம் வரும். தூங்கிக்கொண்டே இருப்பவர்கள் எப்படி சிந்திப்பார்கள். அரைவயிறு சாப்பிடவைப்பார் குரு. மூளையை தூண்டும் விசயத்தில் தான் அதிகமாக குரு தன் பலனை காட்டுவார்.
எனக்கு குரு தசா ஆரம்பித்த நேரத்தில் இருந்து இரண்டு நேரம் மட்டுமே சாப்பிடுவேன். இரவு பயணம் செய்தால் காலை உணவு சாப்பிடுவது வழக்கம் அப்படி இல்லை என்றால் சாப்பிடுவது கிடையாது. இருவேளை உணவு பழக்கம் பிராமணர்களிடம் இருக்கின்றது. இப்பொழுது உள்ள பிராமணர்கள் இதனை கடைபிடிக்கிறார்களா என்று தெரியாது. இருவேளை உணவை மட்டும் சாப்பிடும் பல பிராமணர்களை நான் பார்த்திருக்கின்றேன்.நெய் உணவில் அதிகமாக மனது ஈடுபாட்டை காட்டும்.
இருவேளை உணவை மட்டும் நீங்கள் சாப்பிடவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மூன்று வேளையும் சாப்பிடுங்கள். குறைவாக சாப்பிடுங்கள். நீங்கள் அசைவம் சாப்பிடுவராக இருந்தால் மாதத்திற்க்கு இருமுறை சாப்பிடுங்கள. அதிகமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.
பொது தகவல்.
தினமும் அதிகமாக நடைப்பயிறசி செய்வது நல்லது. எனக்கு நடப்பதற்க்கு மிகவும் பிடிக்கும். தினமும் அடையாரில் இருந்து பெசன்ட்நகர் பீச் வரை நடந்து சென்றுவிட்டு வருவேன். காலையில் வேலை இருப்பதால் இரவில் செல்வது உண்டு. குரு தசா உங்களுக்கு நடந்தால் குறைந்தபடசமாவது நடைபயிற்சி செய்வது நல்லது.குரு தசா நடைபெற்றால் உணவு பழக்க வழக்கத்தை முதலில் மாற்றுவது நல்லது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment