வணக்கம் நண்பர்களே!
என்னிடம் ஆலோசனை கேட்க வரும் நண்பர்களுக்கு ஏதாவது வழியில் நல்லதை சொல்லுகிறேன். ஒரு சிலர் அம்மனின் ஹோமம் செய்ய ஆசைப்படுகிறார்கள். அவர்களையும் வரவேற்கிறேன். ஒரு சிலர் அவர்கள் செய்யும் தொழிலுக்கு ஆன்மீக உதவி கேட்கிறார்கள். அதனையும் நான் செய்துக்கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றேன்.
இதற்க்காக என்னிடம் வருவதற்க்கு முன்பு ஒரு சில கருத்தை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.வாழ்க்கையில் எவ்வளவு கீழ்நிலையில் அல்லது கஷ்டத்தில் பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டு இருக்கலாம் அது தவறு இல்லை. இது தான் கடைசி வழி என்று நமது அம்மனிடம் சரணாகதி அடைந்துவிட்டு என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.
என்னிடமும் தொடர்பு வைத்துக்கொண்டு பிற ஆன்மீகவாதியிடமும் தொடர்பு வைத்துக்கொண்டு நீங்கள் எனது உதவி கேட்கும்பொழுது அது தவறாக உங்களுக்கு முடியும். மனிதன் ஆசைப்படுபவன் தான் தவறு இல்லை. என்னிடம் வரும்பொழுது கண்டிப்பாக படிப்படியாக உங்களுக்கு முன்னேற்றம் என்பதை நான் குறைந்த காலத்திலேயே கொடுத்துவிடுவேன்.
என்னால் உங்களுக்கு கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை கொடுக்கமுடியும் அதற்கு நீங்கள் ஒழுங்காக இருக்கவேண்டும். நான் ஒவ்வொருவருக்கும் கொடுப்பதற்க்கு தயாராக இருக்கின்றேன் ஆனால் ஒவ்வொருவரும் அதற்கு தயாராக இல்லை என்றே தெரிகிறது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment