வணக்கம் நண்பர்களே!
ராகு தசா பலனைப்பற்றி பார்த்து வருகிறோம். ஒருவருக்கு காலசர்ப்பதோஷம் இருந்து ராகு தசா நடைபெற்றால் ராகு தசா காலத்தில் அந்த காலசர்ப்பதோஷம் நீங்கிவிடும்.
ராகு தசா சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நல்லதை செய்யும். ராகு தசா நடைபெறும் காலத்தில் தான் அந்த காலசர்ப்பதோஷமே நீங்கும். காலசர்ப்ப தோஷம் ஒருவருக்கு இருந்தால் அவர் 35 வயதுவரை அவருக்கு மிகப்பெரிய சிக்கல் உண்டாகும். அவர் என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியாது.
பொதுவாக காலசர்ப்பதோஷம் இருப்பவர்கள் மனநிலை பாதிப்புக்குள்ளாவார்கள் அல்லது விபத்தால் மனநிலை பாதிப்புக்குள்ளாகும். தலையில் அடிப்படும்பொழுது மட்டுமே மனநிலை பாதிப்பு ஏற்படும். தலையில் எப்பொழுது அடிப்படும் என்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் அதிகப்பட்சம் செவ்வாய் தசா நடைபெறும் காலத்தில் இது நடைபெறும்.
செவ்வாய் தசா முடிவடைந்து ராகு தசா ஆரம்பித்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல நிலைக்கு வருவார்கள்.காலசர்ப்ப தோஷம் அதிகம் விபத்தை அல்லது மனநிலைபாதிப்பை ஏற்படுத்தும். அப்படி காலசர்ப்பதோஷம் இருப்பவர்களுக்கு ராகு தசா நல்ல காலம் என்றே சொல்லலாம்.
ராகு தசா ஆரம்பித்தவுடனே நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது. சம்பந்தப்பட்ட புத்திகளின் கிரகங்கள் நன்றாக இருக்கும்பொழுது நல்ல நிலைக்கு ராகு தசா உயர்த்தும். காலசர்ப்பதோஷம் உள்ளவர்க்கு ராகு தசா நல்லது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment