Followers

Wednesday, November 20, 2013

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                     ஒரு நண்பர் தொழில் அனுபவத்தை படித்துவிட்டு கேள்வி ஒன்றை எழுப்பினார். அவரின் கேள்வி இது. நல்ல வியாபாரத்திற்க்கு தெய்வ அருள் வேண்டும். தீயவழியில் பணம் ஈட்டுவதற்க்கு எந்த தெய்வத்தை வணங்குகிறார்கள் என்றது போல் இந்த கேள்வி இருந்தது.

இந்த காலத்தில் ஆன்மீகத்தை நல்லவழியில் பயன்படுத்துவதை விட தீயவழிக்கு பயன்படுத்துவது தான் அதிகமாக இருக்கின்றது. தீயவழியில் சம்பாதிக்கவில்லை என்றால் நாட்டில் உள்ள கோவிலில்களில் திருவிழா நடப்பதே கடினம். 

நீங்களே பார்த்து இருக்கலாம் ஊரில் உள்ள கோவில்களில் திருவிழா நடைபெறும். அதில் பார்த்தால் ஊரில் எவர் அநியாயவழியில் சம்பாதித்தார்களோ அவர்கள் தான் அதிகமான செலவு செய்வார்கள். தவறு செய்பவர முடிந்தளவு தன் பணத்தை இப்படி செலவு செய்வார்கள்.

தவறான வியாபாரம் செய்பவர்களுக்கு ஏகாப்பட்ட ஆன்மீகவாதிகள் பின்புலத்தில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு இவர்கள் உதவி செய்கிறார்கள். ஏன் தவறான வழிக்கு உதவி செய்கிறார்கள் என்று கேட்க தோன்றும். அதனைப்பற்றி எனக்கு தெரியவில்லை.

பல தவறான வியாபாரத்திற்க்கு ஆன்மீகவாதிகளின் பங்கு இருக்கின்றது என்பதை பல பேர்கள் சொல்ல கேள்விப்பட்டு இருக்கின்றேன்.நேர்மையான வழியில் சம்பாதிப்பவர்களுக்கு ஒரு எண்ணம் தான் இருக்கும். தவறான வழியில் சம்பாதிப்பவர்களுக்கு பல எண்ணம் இருக்கும். அந்த எண்ணத்தில் ஆன்மீக எண்ணமும் ஒன்று.

sநன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment: