வணக்கம் நண்பர்களே!
நாம் கடவுளிடம் வேண்டுதல் வைத்து உடனே நடைபெறவில்லை என்று நினைத்தால் அது நமது தவறான புரிதல் தானே தவிர வேறு ஒன்றும் கிடையாது. நான் இன்று கோவில் என்று வழிப்பட்டு வந்தேன் எனக்கு ஒன்றும் நடைபெறவில்லை ஆனால் எனது எதிரி தீயவை மட்டும் செய்துக்கொண்டு இருக்கிறான் அவன் நன்றாக இருக்கிறான் நான் நன்றாக இருக்கவில்லையே என்று பலர் சொல்லுவது உண்டு.
நீங்கள் ஒரு முறையே அல்லது பலமுறையோ கோவிலுக்கு சென்று வழிப்பட்டு வந்ததால் உடனே பலனை தரவேண்டும் என்று நினைப்பது தவறு. நம்மை சிக்கவைத்திருப்பதே கடவுள் தான். அப்படி இருக்கும்பொழுது நாம் செய்த தவறுக்காக நாம் விண்ணப்ப மனுவை தான் கடவுளிடம் வைத்திருக்கிறோம். அவர் அதனை பார்த்து என்ன தரவேண்டும் என்று நினைக்கிறாறோ அதனை தான் தருவார். நாம் விரும்புவது போல் உடனே தந்துவிடவும் மாட்டார்.
எதிரி நன்றாக இருக்கின்றனோ அவன் தீயது செய்கிறான் நான் நல்லது செய்கிறேன் எனக்கு மட்டும் கடவுள் ஏன் இப்படி சோதனை தருகிறான் என்றும் பல பேர் கேட்பார்கள். நாம் நம்மை மட்டும் தான் பார்க்கவேண்டுமே தவிர பிறரை பார்க்ககூடாது. ஒருத்தர் தவறை மட்டும் செய்துக்கொண்டே இருக்கின்றார் என்றால் அவர்க்கு என்று ஒரு காலம் வரும் அப்பொழுது அவருக்கு சிக்கல் ஆரம்பித்துவிடும்.
கிரகநிலைகளில் ராஜகிரகம் என்று அழைக்கப்படும் குருவும் சனியும் ராசியை கடக்கும் காலங்களில் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். நீங்கள் ஒரு மாதத்தில் பிறர் உங்களின் வேண்டுதலலால் மாறவேண்டும் என்று நினைத்தால் அது எப்படி சாத்தியப்படும். எப்பேர்பட்ட கொடுரனாக இருந்தாலும் அவனுக்கு நல்ல நேரத்தில் அவன் ஆடி தான் நிற்பான். அவனை நாம் வேடிக்கை மட்டுமே பார்க்கலாம். அவனை வீழ்த்தவேண்டும் என்று நினைக்ககூடாது. நீங்கள் அவனால் அடி வாங்கவேண்டும் என்று இருந்தால் அடி வாங்கிதான் ஆகவேண்டும்.
சம்பந்தப்பட்ட நபருக்கு கெடுதல் நேரம் வரும்பொழுது மட்டுமே அவனின் வீழ்ச்சி இருக்கும். அதுவரை நாம் பொறுமையாக காலம் டா இது எல்லாம் என்று நினைத்துக்கொண்டு இருங்கள். தீயவனுக்கே ஒரு நல்ல நேரம் இருக்கும்பொழுது உங்களை போல் நல்லவர்களுக்கு நல்ல காலம் வைக்காமல இருப்பான இறைவன். கண்டிப்பாக உங்களுக்கு ஒரு நல்லவாய்ப்பை இறைவன் தருவான்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment