ஒரு உதாரண ஜாதகத்தோடு ராகு தசாவைப்பற்றி பார்க்கலாம். இந்த ஜாதகம் ஒரு ஆணின் ஜாதகம். இவர் மகரராசியை லக்கினமாக கொண்டவர். துலாம் ராசி. இவரது லக்கினாதிபதி பாக்கியஸ்தானம் என்னும் ஒன்பதாவது வீட்டில் அமர்ந்திருக்கிறார்.
எட்டாவது வீட்டில் குரு செவ்வாய் ராகு அமர்ந்திருக்கிறார்கள். ஆறாவது வீட்டு அதிபதியான புதன் கேது கிரகத்தோடு இரண்டாவது வீட்டில் அமர்ந்திருக்கிறார். இவருக்கு ராகு தசா ஆரம்பித்த காலத்தில் இருந்து உடல்நிலை சரியில்லை என்றே தெரியவருகிறது. ஆறாவது வீட்டு அதிபதியோடு கேது அமர்ந்திருப்பதால் இந்த பிரச்சினை. ராகு கேதுவின் குணத்தையும் வாங்கி தசாவை கொடுத்துவிட்டார். கேதுவோடு புதன் இருப்பதால் பிரச்சினை. அடிக்கடி மருத்துமனை சென்று விட்டு வந்திருக்கிறார்கள்.
மருத்துவமனை காட்டும் இடமான பனிரெண்டாவது வீட்டு அதிபதியாக குருகிரகம் ராகுவோடு சேர்ந்து இருக்கிறார்.ராகு தசாவில் செவ்வாய் புத்தி நடைபெறும் காலத்தில் மிகப்பெரிய அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. செவ்வாய் கிரகம் எட்டில் ராகுவோடு சேர்ந்து இருந்ததால் இந்த அறுவைசிகிச்சையை ஏற்படுத்திவிட்டது.
ராகு எட்டாவது வீட்டில் இருந்து தசா நடைபெற்ற காரணத்தால் இந்த பிரச்சினை ஏற்படுத்தி இருக்கும் அதோடு ராகுவோடு சேர்ந்த கிரகங்களும் சரியில்லாததால் பிரச்சினை அதிகமாக போய்விட்டது.
ராகுவோடு சேரும்பொழுது நல்ல கிரகங்களும் பல்பு வாங்கிவிடும். நல்ல பண்பை மாற்றிவிடும் தன்மை ராகுக்கு அதிகம் இருக்கும். ராகுவோடு சேராகூடாத கிரகங்கள் சேர்ந்ததால் அதிகமான பிரச்சினையை சந்திக்கும் நிலை சிறிய வயதில் இவருக்கு ஏற்பட்டது.

நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment