Followers

Saturday, November 16, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 82


ணக்கம் ண்பர்களே!
                     ராகு தசாப்பற்றி பார்த்துவருகிறோம். எந்த ஒரு தசாவும் மூன்றாவது தசாவாக வந்தால் பிரச்சினையை அதிகமாக சந்திக்க நேரிடும். 

ராகு தசாவும் அப்படிபட்ட ஒன்றான தசாதான். ரோகிணி,ஹஸ்தம், திருவோண நட்சத்திரம் சந்திரனின் நட்சத்திரம் இதில் பிறந்தவர்களுக்கு மூன்றாவது தசாவாக ராகுவின் தசா நடைபெறும். ராகு தசா நடைபெறும் காலங்களில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். எடுக்கும் முடிவுகளில் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது.

சந்திரனின் நட்சத்திரத்தை உடையவர்கள் என்பதால் சந்திரன் மனதிற்க்கு காரகன் வகிக்கும் கிரகம் என்பதால் மனதில் தான் அதிகப்படியான மாற்றத்தை உருவாக்கிவிடுவார். தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவது மட்டுமே ராகுவின் வேலையாக இருக்கும்.

மனநோய் தாக்குதலுக்கு ஆளாகும் நிலையும் ஏற்படும். சம்பந்தமே இல்லாமல் டென்ஷன் ஆகும் நிலை எல்லாம் வரும்.தீய பழக்க வழக்கங்கள் ஏற்பட்டு அதனால் கெட்ட பெயர் எடுக்கும் நிலை வரும்.காம்த்தில் ஈடுபாடு அதிகமாக வைக்கும்.

இளமை பருவத்தில் உடலில் வியாதிகள் வரும். வருகின்ற வியாதி ராகு எந்த வீட்டிற்க்கு சம்பந்தம்படுகிறதோ அந்த வீட்டில் உள்ளவாறு வரும்.உங்களின் ஜாதகத்தை வைத்து பார்த்துக்கொள்ளுங்கள்.

சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகப்பட்சம் வாழ்க்கை என்றால் என்ன என்று கற்றுக்கொடுக்க ராகு தசா நடைபெறும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: