வணக்கம் நண்பர்களே!
ஒரு ஆன்மீகவாதியாக இருப்பதற்க்கு முதல் தகுதி என்ன என்றால் சகிப்புதன்மை. இதனைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
ஒரு சில இடங்களுக்கு நான் செல்லும்பொழுது அவர்கள் நடந்துக்கொள்ளும் முறையே நன்றாக இருக்காது. நான் ஒன்று சொன்னால் அவர்கள் ஒன்று சொல்லுவார்கள். சரி அனைத்தையும் நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்துவிடுவேன். எந்தவித எதிர்வினை காட்டுவதில்லை.
கடவுள் இவர்கள் வழியாக நம்மை சோதிக்கிறார் என்ற அர்த்தத்தில் அதனை எடுத்துக்கொண்டுவிடுவது. ஒரு சில நேரங்களில் நாம் சொல்லும் சோதிடபலன்கள் தவறாக போய்விடும். அப்பொழுதும் நாம் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் நமக்கு ஆப்பு அடிக்க கடவுள் செய்யும் லீலை தான்.
ஆன்மீகத்திற்க்காக வெளியில் செல்லும்பொழுது கூட சாக்கடை ஒரத்தில் கூட நின்றுக்கூட சாப்பிடவேண்டும் அதனையும் நாம் சகித்துக்கொண்டு தான் சாப்பிடவேண்டும்.குரு என்ன சொல்லுவார் என்றால் திடீர் என்று இரவில் வா நடக்கலாம் என்று கூப்பிடுவார். நாங்கள் எங்கையாவது யாத்திரை செல்லும்பொழுது நடக்கும். வா நடக்கலாம் என்பார். உடனே நாம் நடந்து தான் ஆகவேண்டும். எந்த விதத்திலும் நாம் மறுத்துபேசமுடியாது. அவர் என்ன சொல்லுகிறாரோ அதனை நாம் செய்ய வேண்டும்.
அனைத்தையும் சகிக்கும்பொழுது மட்டுமே நாம் ஆன்மீகத்தில் முன்னேற்றம் என்பதை பார்க்கமுடியும். அப்பொழுது மட்டுமே நம்மிடம் சக்திவரும். சகிப்புதன்மை மட்டும் இலலை என்றால் நாம் ஆன்மீகத்திற்க்கு தேவையற்றவர் என்ற அர்த்தம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment