Followers

Friday, November 15, 2013

கேள்வி& பதில்


surya said...
முதல் முறை உங்களுடன் முரண்படுகிறேன். கோபம் என்பது கெட்டவர்களை அழிக்க தேவயான சக்தி. இதை தெய்வங்கள் பயன்படுத்தும் போது நரசிம்ம வதம் என்றும் சூர சம்ஹாரம் என்றும் சொல்லி பெருமைப்படும் நாம் , ரிஷிகளை ஏன் தவறாக கருத வேண்டும்? உங்களை போன்ற ஒரு நல்ல ஆத்மா , பெரியோர்களை பிழை சொல்வது வருத்தமாக இருக்கிறது.

வணக்கம் நண்பரே !
                 கோபம் நல்லது தான் அந்த கோபத்தால் அடு்த்தவர்களை அழிக்ககூடாது. அவனை திருத்தவேண்டும். அதனை விட்டுவிட்டு ஒருத்தனை அழிப்பது என்பது தவறு. அதனை மனிதன் செய்தாலும் சரி தெய்வம் செய்தாலும் சரி. தவறு தவறு மட்டுமே. 

உடல் என்பது வீடு. ஆத்மா என்பது அந்த வீட்டில் இருக்கும் ஒரு நபர். அந்த நபர் தவறு செய்ததால் அந்த வீட்டை இடிப்பது என்ன நியாயம். அந்த ஆத்மா செய்த தவறுக்கு வீடு என்ன செய்யும். அந்த வீடு இடிப்பட்டதால் மறுபடியும் ஒரு வீட்டை அமைத்துக்கொண்டு மறுபடியும் தவறை தான் செய்யும். திருத்தவேண்டியது ஆத்மாவை மட்டுமே. 

அந்த வீட்டில் ஆத்மா இருந்த ஒரே காரணத்தால் அந்த வீட்டை இடிப்பது நியாயம் இல்லை என்று எனக்கு தோன்றுகிறது. வதம் செய்யாமல் அந்த ஆத்மாவை திருத்த நரசிம்மர் செயல் புரிந்திருந்தால் நான் நரசிம்மரை போற்றி இருப்பேன்.

ஒரு சாதாரண மனிதனாக மட்டுமே நான் ஒரு கருத்தை நோக்குகிறேன். பெரியோர்கள் பலர் இருந்திருக்கின்றனர் அவர்கள் நல்லது செய்து இருக்கின்றனர் நான் ஏற்றுக்கொள்கிறேன். இப்படிபட்டவர்களை பார்க்கும் பொழுது எனது மனது கேள்வி கேட்கிறது. இந்த ரிஜி சாபம் விட்டது தவறு.

மனிதர்களுக்கே கோபம் வராமல் கடவுள் அருள் செய்கிறார் என்றால் கடவுளின் பெயரை சொல்லிக்கொண்டு இருந்தவன் எப்படி இருக்கவேண்டும். பத்து நாட்கள் கோவிலு்க்கு செல்லும் பக்தனுக்கு அடுத்தவன் மீது கருணை வரும்பொழுது தெய்வத்திடம் சரணாகதி அடைந்தவன் சாபம் விடுகிறான் என்று சொன்னால் அவனை ரிஜி என்று நாம் எப்படி சொல்லுவது?

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: