Followers

Sunday, November 3, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 68


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சிலருக்கு ராகு தசா நடைபெறும்பொழுது முறைதவறிய ஒரு சில காமதொடர்பு கூட ஏற்படுத்திவிட்டுவிடும். சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு உறவை ஏற்படுத்திவிடுவார்.

பொதுவாக ராகு மாந்தியோடு அல்லது சனியோடு மற்றும் செவ்வாயோடு இருக்கும்பொழுது ராகு தசா நடைபெறும் காலத்தில் இப்படியோடு உறவை ஏற்படுத்திவிடுவார். காமத்தால் சீரழிவது ஒரு புறம் இருந்தாலும் ஒரு புறம் தவறான உறவு என்று ஏற்படுத்திவிடும். அதனால் சிக்கலாகி ஒரு சிலர் தற்கொலை கூட செய்யகூடும்.

மாந்தியோடு ராகு இருக்கும்பொழுது கவனமாக செயல்பட வேண்டும். பிரச்சினையே எதிர்கொள்வதே இவர்களோடு வேலையாக ராகு தசாவில் இருக்கும் அதுவும் பெண்கள் வழியாக பிரச்சினை ஏற்படுவது வாரத்திற்க்கு ஒரு முறையாவது நடந்துக்கொண்டே இருக்கும்.

ராகு புதனோடு இருந்து ராகு தசா நடைபெறும் பொழுது திருநங்கையோடு தொடர்பு வைத்திருப்பார்கள். ஒரு சிலர் திருநங்கை போல் மாறிவிடுவதும் உண்டு. அவர்களின் குணங்கள் அப்படியே இவர்கள் வெளிப்படுத்துவார்கள்.

பதிவுக்கு வரும் பெண்களை கருத்தில் கொண்டு இத்துடன் இதனைப்பற்றி நிறுத்திவிடுகிறேன். நாம் இப்படி எல்லாம் நடக்கமுடியுமா என்று நினைக்கும் விசயத்தை காமம் வழியாக ராகு தசாவில் நடக்க வைப்பார். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: