Followers

Friday, November 15, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 80


வணக்கம் நண்பர்களே!
                     ராகு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். இதில் ஒரு ஆன்மீக கருத்தைப்பற்றி சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். இது உங்களுக்கு புரிதல் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அதிகப்பட்சமாக இது நடக்கிறது.

ராகு தசா நடைபெறும் காலத்தில் ஒருவர் இறந்தால் அந்த ஆத்மா வீட்டை விட்டு வெளியில் செல்வதில் தாமதம் ஆகிறது. ஒரு சில ஆத்மாக்கள் வெளியில் செல்கிறது. 

ராகு மாந்தீரிகத்திற்க்கும் காரகம் வகிக்கிறார் அல்லவா. மாந்தீரிகம் செய்து உயிர் பறிக்கும் நபர்களின் ஆத்மாவும் மோட்சத்திற்க்கு என்று செல்வதில்லை.அதேப்போல் ராகு தசாவில் நோய்வாயப்படுபவர்கள் இற்ந்தால் அவர்களின் ஆத்மா வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் வீட்டிற்க்குள்ளே இருக்கின்றது.

குடியிருக்கும் வீட்டில் ஆத்மா உள்ளேயே இருக்கும்பொழுது அது பல பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பிரச்சினை உருவாக்கும். வீட்டில் உள்ளவர்களின் நலம் கேள்விக்குறியாகும்.

இறந்தவர்கள் உங்களுக்கு உறவினர்களாகவே கூட இருக்கலாம் ஆனால் ஆத்மா என்ன செய்யும் நீங்கள் ஏன் உலகத்தில் இருக்கிறீர்கள் என்னோடு வந்துவிடுங்கள் என்று உங்களை கூப்பிடும்.இது எல்லாம் ராகு தசா நடந்து இறக்கும் வீட்டில் நடைபெறும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

varadu4ever said...

ஐயா ஜாதகத்தில் உள்ள யோகம் பற்றி பதிவிடுங்கள். கஜகேசரி யோகம் இருந்தால் மற்ற கெடுதல் தரும் பலன்களை குறைத்து விடுமா ஐயா