Followers

Sunday, November 17, 2013

செய்யகூடாதது


ணக்கம் ண்பர்களே!
                     குறிச்சொல்லுதல் பற்றி பார்த்து இருப்பீர்கள் இந்த குறிச்சொல்லுதல் என்பது ஒரு காலகட்டத்தில் தெய்வ அருளால் குறிச்சொல்லி வந்தார்கள். அவர்கள் சொல்லும் குறியும் சரியாக இருக்கும்.

ஒரு சில காலங்களில் கோவில்களில் கூட குறிச்சொல்லுதல் ஒரு விழாவாக நடத்தி வந்தார்கள். இன்று குறிச்சொல்லுதல் என்பது ஒரு பித்தலாட்டம் என்று ஆகிவிட்டது. இன்று பல இடங்களில் நான் பார்த்திருகிறேன். குறிச்சொல்லும் நபர்கள் குடித்தால் தான் குறியே சொல்லுகிறார்கள்.

ஒருவரை பார்த்தவுடன் அவர்களின் அசைவுகள் மற்றும் அந்த நேரத்தில் காணப்படுகின்ற நிமித்தங்களை வைத்து குறிச்சொல்லுகிறார்கள். இது எந்தளவுக்கு உண்மையாக வரும் என்பது ஐயமே. இன்று பக்தியோடு யாரும் குறிச்சொல்லுவது கிடையாது.

பல பேர்கள் கோவில்களில் வாசலில் உட்கார்ந்துக்கொண்டு அல்லது பிரபல கோவில்கள் இருக்கும் ஊர்களில் கடை வைத்து குறிச்சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

நீங்கள் ஒரு கோவிலுக்கு சாமி கும்பிடச்சென்றால் சாமி கும்பிட்டு வீட்டிற்க்கு வரவேண்டுமே தவிர அந்த நாளில் குறிக்கேட்பதோ ஜாதகம் பார்ப்பதோ இருக்ககூடாது.

நீங்கள் கோவிலுக்கு சென்ற புண்ணியம் கிடைக்காது. பல பேர்கள் செய்யும் தவறு இது தான். கோவில் சென்றாலே எங்குடா சோதிடர் இருக்கிறார் என்று பார்ப்பது. தயவு செய்து இப்படி நீங்கள் இருக்காதீர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: