Followers

Tuesday, November 5, 2013

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    நண்பர் KJ அவர்கள் எனக்கு நிறைய மெயில் மற்றும் கமெண்ட்ஸ் அனுப்பி ஒவ்வொன்றையும் கேட்பார். அவர் கேட்ட கேள்வியை வைத்தே நான் பதிவை எழுதிக்கொண்டிருக்க முடியும். எல்லா கேள்வியும் வித்தியாசமாக இருக்கும் அதோடு அறிவு பூர்வமாக இருக்கும். அனைத்தையும் என்னால் பதிவில் தரமுடியவில்லை. காரணம் அதில் இருக்கும் விசயங்கள் அப்படிபட்டவை. முதலில் KJ அவர்களுக்கு அவரின் அறிவின் வளர்ச்சிக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடுவோம். வாழ்த்துக்கள் KJ. 

ஆன்மீகத்திற்க்கு வருவதற்க்கு முன்பே பல புராணங்களை நான் படித்தவன். நீங்கள் புராணங்களை ஏதோ கதைப்போல் படித்து இருக்கலாம். நான் படித்தது அதில் இருந்து நமக்கு என்ன கிடைக்கும் என்பதை தான் படித்தேன் அதனை வைத்து எப்படி நம்மை மேம்படுத்திக்கொள்ளமுடியும் என்று தான் படித்தேன். அதில் உள்ள விசயங்களை வைத்து தான் இன்று பல பேர்க்கு நல்லது செய்யமுடிகிறது.

புராணங்களில் ஏகாப்பட்ட விசயங்கள் இருக்கின்றன. அதனை எல்லாம் நான் வெளியில் சொன்னால் அதனை பின்பற்றி பல பேருக்கு ஆபத்தை விளைவிக்கமுடியும்.அனைத்தையும் வெளியில் சொல்லிவிடமுடியாது.நீங்கள் புத்தகங்களை வாங்கி படிக்கலாம் ஆனால் அதனை செயல்படுத்துவதை மறைமுகமாக சொல்லிருப்பார்கள்.

நீங்கள் அனைவரும் திராவிட பரம்பரையில் வந்தவர்கள் இதனை எல்லாம் நீங்கள் நம்புவதே மிகப்பெரிய விசயம். அதில் உள்ள தந்திரவழிகளை எப்படி நீங்கள் பயன்படுத்தி பார்ப்பீர்கள்.நான் அதனை எப்படி செயல்படுத்தலாம் என்று மட்டுமே யோசிப்பேன்.

எனக்கு ஒரு வேலை வந்தது. அது எப்படிபட்ட வேலை என்றால் கொஞ்சம் வில்லங்கமான வேலை. ஒரு மொபைல் போனுக்கு கால்களே வரகூடாது அவரின் மொபைல் போனை முடக்கவேண்டும் என்று கேட்டுருந்தார்கள். இது ஒரு காலகட்டத்தில் எனக்கு வந்த ஒரு வேலை இது. அறிவியல் ரீதீயாக செய்வதற்க்கு சாத்தியம் இருக்கின்றது. அப்படி செய்யும்பொழுது அது வெளியில் தெரிவதற்க்கும் சாத்தியம் இருக்கின்றது. ஆன்மீக ரீதியாக மட்டுமே செய்யவேண்டும்.

அம்மனை வைத்து செய்யமுடியாது. ஏன் அம்மனிடம் சக்தி இல்லையா என்று கேட்காதீர்கள். இந்தந்த வேலையை இதனை வைத்து தான் செய்யவேண்டும் என்று விதி உள்ளது. அதனை வைத்து செய்தால் மட்டுமே சாத்தியப்படும்.  நாம் ஒரு மனிதனுக்கு செய்யபோவதில்லை ஒரு அறிவியல் இயந்திரத்தை முடக்கபோகின்றோம் அப்பொழுது சரியாக செய்யவேண்டும் கொஞ்சம் திட்டம் சரியில்லை என்றாலும் பிரச்சினை வந்துவிடும். அப்பொழுது தான் நான் என்றோ படித்த ஒரு புராணம் ஞாபகம் வந்தது.

புராணத்தின் பேரை மறந்துவிட்டேன். ஆஞ்சநேயர் சந்திரனை பிடித்தார் என்று வரும். முதலில் சந்திரனை வைத்து தான் மொபைல் செயல்படுகின்றது என்பதை கண்டிபிடிப்பதற்கே எனக்கு கொஞ்சம் நாள் தேவைப்பட்டது. அதனை எல்லாம் சொல்லி உங்களின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. 

ஆஞ்சநேயரை வைத்து செய்தால் இதனை செய்துவிடலாம் என்று தீர்மானித்து செயல்படுத்தினேன். சரியாக சம்பந்தப்பட்டவரின் மொபைல் போனின் இணைப்பு முடங்கியது. இரண்டு நாட்களுக்கு முடக்கிவைத்தேன்.அதுவே சம்பந்தப்பட்ட நபருக்கு மிகப்பெரிய இழப்பு.

இந்தியாவின் ஆன்மீகம் என்பது உலகஅளவில் மிகப்பெரிய விசயங்கள் உள்ளடங்கியது. அறிவியல் எல்லாம் சும்மா செவ்வாய்க்கும் சந்திரனுக்கும் ராக்கெட் விட்டுக்கொண்டு இருப்பார்கள். நம் ஆட்கள் இந்த பிரபஞ்சத்தை தாண்டி எங்கேயோ போய்விட்டார்கள்.

நமது மதத்தில் நிறைய விசயங்கள் இருக்கின்றன என்பதை நான் நம்புகிறேன் நீங்கள் நம்பவில்லை. நம்பினால் உடனே ஒரு குருவை நாடி ஆன்மீகத்திற்க்குள் இறங்குங்கள். ஆச்சரியத்தில் மூழ்கிவிடுவீர்கள்.

ஜெய் ஸ்ரீ  ராம்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: