Followers

Sunday, November 3, 2013

ஆன்மீக அனுபவங்கள் 130


வணக்கம் நண்பர்களே!
                    நம்ம தெய்வத்தை வைத்து நம்மளே அடித்துவிட்டானே என்று நினைக்கதோன்றும். இது சின்ன தகவல் வழியாக எளிதாக புரியவைக்கிறேன். படியுங்கள். 

ஒரு கொலை நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். கண்டிப்பாக அந்த ஊரில் உள்ளவர்களில் யாராவது ஒருவன் சம்பந்தம்படாமல் அநத ஊரில் உள்ளவனை கொலைசெய்யமுடியாது. அந்த ஊரில் ஒரு எட்டப்பன் கண்டிப்பாக இருப்பான். நான் கூட நண்பர்களிடம் சொல்லுவது உண்டு. காந்தியடிகளை கொல்லும்பொழுது காந்தியோடு இருக்கும் நபர்கள் ஒருவராவது கொலை செய்யும் நபர்களோடு தொடர்பு வைத்திருப்பார்.ஒரு மனிதனை கொன்றால் அய்யோ என்று கத்துவானா அல்லது சுட்டவனை விட்டுவிடுங்கள் என்று கத்துவானா. காந்தியோடு ஒரு கொலைக்காரன் இருந்திருப்பான்.அவன் சுட்டவனை விட்டுவிடுங்கள் என்று கத்திருப்பான். நமக்கு எதற்கு அரசியல் சொன்ன வந்த மேட்டருக்கு வந்துவிடுகிறேன்.

சம்பந்தப்பட்ட ஊரில் உள்ளவர்களான தெய்வத்தோடு கூட்டணி அமைத்து தான் இந்த காரியத்தை செய்வார்கள். இப்படி செய்வது எல்லாம் மிகவும் கஷ்டமான ஒரு விஷயம் அப்படி செய்கிறவன் அனைத்தையும் கரைத்து குடித்திருக்கவேண்டும். அடுத்த ஊரில் இருக்கிறவன் நமக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் அவன் எந்தளவுக்கு நம்மிடம் வாங்கியிருப்பான். அதே தான் தெய்வங்களுக்கும் நாம் செய்திருக்கவேண்டும். அப்பொழுது மட்டுமே அவன் தெய்வமே அவனை அடிக்கும். 

நான் ஒவ்வொரு ஊருக்கும் சென்றாலும் அந்த ஊரில் என்ன சக்தி இருக்கின்றது என்று பார்த்து வைத்துக்கொள்வது உண்டு. நான் நல்லதை செய்வதற்க்கு அப்படி பார்ப்பது உண்டு. ஒரு சில ஊர்களில் சக்தியின் அளவு அதிகமாக இருக்கும். ஒரு சில ஊர்களில் சக்தி இருப்பது போலவே இருக்காது சும்மா இருக்கும்.

மேலே சொன்ன தெய்வவிசயங்கள் அனைத்தும் நன்றாக கற்றபிறகு பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது. சும்மாவாக போய் பயிற்சி இல்லாமல் செய்யாதீர்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: