Followers

Tuesday, November 5, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 72


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். இப்பதிவில் ராகு சூரியனோடு சேர்ந்து இருந்து தசா நடைபெற்று வந்தால் எப்படி பலனை தரும் என்று பார்க்கலாம்.

ராகுவும் சூரியனும் சேர்ந்தால் இந்த சேர்க்கை ஒரு கெடுதலான சேர்க்கை. ஆத்மாக்காரன் ராகுவோடு சேரும்பொழுது ஆத்மாவிற்க்கு பங்கம் என்று தான் சொல்லவேண்டும். ஆத்மாவிற்க்கு பங்கம் என்று சொன்னால் கண்டிப்பாக நமக்கு கண்டம் வருவதற்க்கு வாய்ப்பு அதிகம். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

ராகுவின் தசாவில் ஏழாவது வீடு மற்றும் இரண்டாவது வீட்டு புத்தியில் எச்சரிக்கை அவசியம். மரணத்தை சந்திக்க வாய்ப்பு இருக்கின்றது. ஒரு சிலருக்கு பனிரெண்டாவது வீட்டின் புத்தியிலும் இப்படி ஏற்பட வாய்ப்பு உண்டு.

சூரியனோடு சேருவதால் ஆத்மாவிற்க்கு பங்கம் என்று சொன்னேன். எப்படிபட்ட பங்கம் என்றால் ஒரு சிலர் கொலை செய்யப்பட்டு கூட இறக்க நேரிடும். என்னங்க இப்படி பயமுறுத்திகிறீர்கள் என்று கேட்க தோன்றும். உண்மையில் அப்படி சிலருக்கு நடந்துள்ளதால் சொல்லுகிறேன். ராகு என்பவர் ஒரு ரெளடி போல் தான் அவர் செய்யும் செயல் அப்படிப்பட்டதால் சொல்லுகிறேன். 

ராகுவும் சூரியனும் சேர்ந்து அமர்ந்து ராகு தசா நடைபெறும்பொழுது அரசாங்கத்தையே ஒரு சிலர் கொள்ளை அடித்துவிடுவார்கள். அரசாங்க அலுவலகத்தில் இருந்து ஏதோ ஒரு துறையில் கைவைத்துவிடுவார்கள்.பல பேரை நீங்கள் பார்த்திருக்ககூடும் இப்படி சம்பாதித்து கொடுத்துவிடும்.

ராகுவும் சூரியனும் இணைந்து ராகு தசா நடைபெறும்பொழுது உடல் முழுவதும் கட்டி ஏற்பட்டுவிடும். உஷ்ணகட்டி ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். பல பேர்க்கு இது மாதிரி நடந்துள்ளது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: