Followers

Thursday, November 7, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 76


வணக்கம் நண்பர்களே !
                    ராகு தசாப்பலன்களைப்பற்றி பார்த்து வருகிறோம். நண்பர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி ஏன் இவ்வளவு நாட்கள் ராகு தசாவைப்பற்றி எழுதி வருகிறீர்கள் என்று கேட்டார்கள். சோதிடம் ஒரு உலகமாக கடல் என்றால் ஒவ்வொரு கிரகங்களும் தனித்தனி கடல் அதில உள்ள விசயங்கள் கோடிக்கணக்காக இருக்கும் நான் எழுதுவது எல்லாம் மிக குறைந்த விசயங்கள்.

ஒவ்வொரு மனிதனின் ஜாதகமும் வித்தியாசமான ஒன்று அதில் நடைபெறும் தசா புத்திகளும் வித்தியாசமாக தான் இருக்கும். அதனை கொஞ்சம் கோடிட்ட காட்டுவது மட்டுமே நமது வேலை.

ராகு தசாவில் எப்படி பலனை தரும் என்பதை சொல்லுவதே கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். ஏன் என்றால் இது எந்த கிரகம் மாதிரி நடந்து நமக்கு பலன் தரும் என்பது ஒரு வகையான சிக்கல். ஒரு சிலருக்கு அமரும் வீட்டை பொருத்து பலன் தரும் ஒரு சிலருக்கு அமரும் நட்சத்திரத்தை வைத்து பலன் தரும்.

ராகு தசா நடைபெறும் பொழுது வரும் வியாதிகூட மருத்துவரால் கண்டுபிடிக்கமுடியாத வியாதியாக தான் வரும். மருத்துவர்களும் புற்றுநோய் வந்துள்ளது என்று மருத்துவம் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். உண்மையில் வந்தது வேற நோயாக இருக்கும்.  

 ராகு என்பது நிழல்கிரகம் என்பதால் பிரச்சினை என்பது நிழல்போல் தான் இருக்கும் அது என்ன நிழல் என்று கண்டிப்பிடிப்பது தான் கடினம். நம்மால் முடிந்தளவு சொல்லிவிட்டால் அதனை வைத்து உங்களால் ஒரளவு கணித்துக்கொள்வீர்கள் என்பதால் அதிகமாக ராகு தசாவைப்பற்றி எழுதுகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: