வணக்கம் நண்பர்களே!
பொதுவாக ஒன்றைச்சொல்லுவார்கள் எந்த கோச்சாரப்பலனை சொல்லும்பொழுது குரு தசா நடைபெற்றால் விதிவிலக்கு என்று சொல்லுவார்கள். ஏன் என்றால் எப்படி இருந்தாலும் குரு தசா நல்லதை செய்துவிடும் என்பதால் சொல்லுவார்கள்.
குரு தசாவில் அப்படி என்ன தான் இருக்கும் என்றால் நாம் முன்ஜென்மத்தில் சேர்த்து வைத்திருக்கும் புண்ணியத்தை எல்லாம் தரும் ஒரு தசாவாக இருப்பதால் அப்படி சொல்லுவது உண்டு. அப்படி புண்ணியம் இருப்பதால் மட்டுமே ஒரளவு குரு தசா நல்லதை தரும் என்று நம்பிக்கை பலபேருக்கு உண்டு. குரு தசாவால் கெட்டவர்கள் குறைவாக தான் இருப்பார்கள். ஒரு சிலருக்கு கெடுதலும் செய்திருக்கிறது.
குரு தசாவை பொருத்தவரை புதன் புத்தி வரவேண்டும். புதன் புத்தியில் இருந்து தான் நல்லதை தர ஆரம்பிக்கும்.அதுவரை பொறுமையாக ஆன்மீக விசயங்களில் கவனம் செலுத்தவேண்டும். இது பொதுப்பலன் மட்டுமே ஒரு சிலருக்கு குரு தசா தொடக்கத்தில் இருந்து நன்மை செய்திருக்கும்.
குரு தசா தொடக்கத்தில் நன்மை செய்யவில்லை என்று கவலைப்படதேவையில்லை குரு தசாவில் புதன் புத்தியில் இருந்து நல்லது நடக்க ஆரம்பிக்கும்.குரு என்ன தான் கெட்டாலும் உங்களின் ஊரில் உள்ளவர்களுக்காகவது தெரியும்படி செய்துவிட்டு செல்லுவார். இந்த ஒரு காரணத்தால் குரு கிரகத்தை சுபக்கிரகம் என்று வைத்திருக்கார்கள்.
நாம் இந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்காமல் இருந்தாலும் முன்ஜென்மத்தில் செய்த புண்ணியத்தை வைத்தாவது உங்களுக்கு நல்லதை செய்துவிட்டு போகும்.குரு தசா அல்லது குரு புத்தி நல்லதை செய்யும் என்று நம்புங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
6 comments:
குருபகவான் ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் அதிபதியாக வரும்போது அவரது தசையில் நன்மையைச் செய்வாரா? லக்கினத்துக்கோ ராசிக்கோ ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் இடத்தில் போய் மறைந்தால் நன்மை செய்வாரா?
வணக்கம் இப்பொழுது தான் பிள்ளையார் சுழி போட்டு உள்ளேன். அனைத்தையும் பதிவிலேயே தந்துவிடுகிறேன். நன்றி
Sir,
Guru in 11th place (magara lagnam), Guru in paba-karthari yogam. Guru dasa completed recently. I cannot say my worries which I faced in guru dasa. Really he gave me lot of experience/lessons in my life.
Fasting on thursdays reduced my worries little.
வணக்கம் KJ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி பலனை தரும் இனி வரும் காலங்களில் அனைத்தையும் பார்க்கலாம்.
பொதுவாக சனி முன்ஜென்ம வினையையும் குரு இந்த ஜென்மத்தில்
நாம் செய்யும் நற்காரியங்களையும் குறிக்கும் , அதாவது இந்த ஜென்மத்துப்
பலனையும் தரும் என்று சொல்வர். இதில் குரு எப்படி பூர்வபுண்ணியத்திற்குக்
காரகம் வகிக்க முடியும் ? அப்படி என்றால் முன்ஜென்மத்தில் பாவம் செய்து இருந்தால்
சனியும் புண்ணியம் செய்து இருந்தால் குருவும் பலன்களைத் தரும் என்று
கொள்ளலாமா ? என் நீண்ட நாளைய சந்தேகம் இது.
தனியாகப் பதிவிட்டு விளக்கினாலும் சந்தோசம் கொள்வேன். நன்றி.
தொடர் பல புதிய தகவல்களுடன் விறுவிறுப்பாக உள்ளது .
இருக்கதா பின்னே ? நமக்கும் குரு தசை தொடங்கி விட்டதே .....ஹி .. ஹி ..
துலாம் லக்னம் குரு மீனத்தில், செவ்வாய் கன்னி யில், சந்திரன் பூரத்தில், 6-ல் குரு ஆட்சி, திசை நன்மை செய்யுமா.
Post a Comment