Followers

Thursday, November 21, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 85


வணக்கம் நண்பர்களே!
                     ராகு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம் அதில் பல்வேறுப்பட்ட தகவலை வைத்து ராகு தசாவைப்பார்த்தோம். ராகு இரண்டாவது வீட்டில் இருந்து அந்த நபருக்கு ராகு தசா நடைபெற்றால் அந்த நபர் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்துக்கொள்வது நல்லது.

வாயை வைத்துக்கொண்டு சும்மா என்றால் பேசாமல் இல்லை. அவர்கள் சாப்பிடும் உணவில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உணவில் விஷத்தை கலப்பதற்க்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் இதனை சொல்லுகிறேன்.

ராகு என்றாலே விஷம் தானே. இன்று பல பேர் சொந்த வீட்டை விட்டு வெளியில் வந்து வேலை செய்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஹோட்டல்களில் சாப்பிடுகிறார்கள். இன்றைய ஹோட்டல்களின் தரத்தை அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

ஹோட்டல்களில் தயார் செய்யப்படும் உணவுகள் தினமும் தயார் செய்யப்படுவதில்லை. ஒரு நாள் தயார் செய்து பல நாட்கள் பயன்படுத்துகிறார்கள். அதனை நீங்கள் சாப்பிடும்பொழுது உங்களின் உடல்நிலை கெட்டுவிடும். அதுவும் ராகு தசாவில் அதுவே விஷமாகிவிடும். ஒரு சிலருக்கு உயிர் இழப்புகூட ஏற்படுத்துகிறது. 

ராகு தசா நடைபெறும் பொழுது உங்களை சொந்த வீட்டில் இருந்து பிரித்துவிடுகிறது. அப்படி நீங்கள் பிரிந்து நகரபுறங்களுக்கு வந்தாலும் நீங்கள் சொந்தமாக சமையல் செய்து சாப்பிட்டுக்கொள்வது நல்லதாக இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

RAMADU Family said...

can you also write about kedhu and kedhu dasa?

rajeshsubbu said...

வணக்கம் கண்டிப்பாக எழுதுகிறேன் நன்றி