வணக்கம் நண்பர்களே !
ராகு தசாவில் ராகு பகவான் நான்காவது வீட்டில் அமர்ந்து ராகு தசா நடைபெறும்பொழுது எப்படி பலன் இருக்கும் என்பதைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
நான்காவது வீடு என்பது மிகவும் முக்கியமான ஒரு வீடு. நமது சுகஸ்தானத்தை காட்டும் இடம். இந்த இடத்தில் பொதுவாக ராகு அமரக்கூடாது என்று சொல்லுவார்கள். ஏன் என்றால் அங்கு அமரும்பொழுது என்ன தான் ராகு நன்றாக இருந்தாலும் பிரச்சினையை அதிகம் கொடுக்கும்.
இளம் வயதாக இருந்தால் காமத்தில் அதிக ஈடுபாட்டை கொடுத்துவிடும். கண்டிப்பாக பெண்களுக்கு ராகு நான்கில் இருக்ககூடாது. அப்படி இருந்து ராகு தசா நடைபெற்றால் பெண்ணின் கற்பு பறிபோகும். சமுதாயத்தில் அவப்பெயரை அந்த பெண் எடுத்துவிடும்.
உங்களின் வீட்டில் வயது வந்த பெண்ணிற்க்கு நான்கில் ராகு இருந்து தசா நடைபெற்றால் மிகவும் எச்சரிக்கையுடன் அந்த பெண்ணை கவனித்துவருவது நல்லது. ராகுவோடு சேர்ந்து ஒரு கெட்ட கிரகம் இருந்தால் சொல்லவேண்டியதில்லை. பல நபர்களிடம் பழக்கம் இருக்கும்.
உங்களுக்கு பலகோடி சொத்து இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். ராகு தசாவில் அனைத்தையும் விற்று தெருக்கோடிக்கு வந்துவிடுவீர்கள். சொத்து நிலைக்காது.
வாகனங்கள் விபத்தை சந்திக்கும். ஆறாவது வீட்டு அதிபதி இவரோடு இருந்தால் வண்டியில் ஏதாவது கள்ளதனம் செய்து காவல்துறையிடம் மாட்டிக்கொள்வீர்கள்.
தாயார் நோயால் படுத்துவிடுவார். தாயின் பிரிவு உங்களை பாதிக்க செய்யும். வீட்டிற்க்குள் பாம்பு அல்லது விஷஜந்துக்கள் வசிக்கும் அல்லது வந்துவிட்டு செல்லும். பொதுவாக நான்கில் அமர்ந்து ராகு தசா நடைபெறும் காலத்தில் ஒருத்தருக்கு மிகவும் கெடுதல் நேரமாக இருக்கும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
3 comments:
வணக்கம் அண்ணா.. ராசியிலிருந்து 4ம் இடமா.. அல்லது லக்கினத்திலிருந்து 4ம் இடமா..அண்ணா..
வணக்கம் லக்கினத்தில் இருந்து பார்க்கவேணடும் நண்பரே.
நன்றி.. எனக்கு கன்னி ராசி.. ராசியிலிருந்து 4ல் ராகுவும்.. லக்கினத்திலிருந்து பார்த்தால் 12ல் ராகு இருக்கிரது.. இப்பொழுது ராகு தசை சுக்கிர புத்தி நடந்து கொண்டிருக்கிரது.. இதில் என் தாயாருக்கு எதும் ஆபத்து வருமா அண்ணா..
Post a Comment