வணக்கம் நண்பர்களே!
ஒரு உதாரண ஜாதகத்தோடு ராகு தசாவை பார்க்கலாம். மகர லக்கினத்தை உடைய ஜாதகம். லக்கினாதிபதி என்னும் சொல்லுக்கூடிய சனி பகவான் எட்டாவது வீட்டில் அமர்ந்து இருக்கிறார். சிம்ம வீட்டில் அமர்ந்து இருக்கிறார். லக்கினாதிபதி எட்டாவது வீட்டிற்க்கு சென்றாலே போராட்டமாக வாழ்க்கை இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும்.
மேஷ ராசியை உடையவர். லக்கினாதிபதி மறைவிடம் சென்றுவிட்டார். ராசி அதிபதி நீசம் ஆகிவிட்டார். கடுமையான போராட்டங்களை சந்திருப்பார் என்று உங்களால் எளிதில் கண்டுக்கொள்ளமுடியும்.பல கிரகங்கள் கெட்டு இருந்தும் இவர் நன்றாக வாழ்ந்தார்.
குரு கிரகமும் பகை பெற்று இருக்கின்றது. குருவாலும் அந்தளவுக்கு முன்னேற்றத்தை கொடுக்கமுடியாது. மிகப்பெரிய கிரகங்கள் முன்னேற்ற்த்தை தரமுடியவில்லை.இவருக்கு ராகு தசா ஆரம்பித்த வருடம் 2005 ஆம் ஆண்டு. ராகு தசா நடைபெற தொடங்கியவுடன் நல்ல வளர்ச்சியை இவருக்கு கொடுக்க ஆரம்பபித்தது. ராகு ஹஸ்த நட்சத்திரத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றார். ஹஸ்த நட்சத்திரம் சந்திரனின் நட்சத்திரம். சந்திரனை பாருங்கள் சுகஸ்தானம் என்றும் நான்காம் வீட்டில் இருக்கிறது.
ராகு ஒன்பதாவது வீட்டில் இருந்து தசா நடைபெற்றதால் நல்ல வாழ்க்கையை கொடுத்தது. கன்னி வீட்டு அதிபதியான புதனும் லக்கினத்தில் இருப்பதால் நன்றாகவே ராகு பலனை கொடுத்தது.
ராகுவோடு சுயபுத்தியும் நன்றாக இருந்தது. குரு புத்தியும் நன்றாக இருந்தது. இடையில் வந்த சனி புத்தி மட்டும் கொஞ்சம் மந்த நிலையை ஏற்படுத்தியது. ரொம்ப கஷ்டப்படுத்தவில்லை.தசாநாதனுக்கு பனிரெண்டில் இருந்ததால் சிறிய மந்த நிலையை ஏற்படுத்தி தந்தது. புதன் புத்தியில் இருந்து நல்ல நிலையில் இருக்கின்றார்.
இந்த ஜாதகத்தை பார்த்தவுடன் நாம் என்ன சொல்லிருக்கமுடியும். அதிகப்பட்சம் கிரகங்கள் சரியான நிலையில் இல்லை அதனால் ராகு தசாவும் சரி இருக்காது என்று சொல்லிருக்ககூடும். இவருக்கு ராகு தசா நல்ல மாற்றத்தை தந்துக்கொண்டு இருக்கின்றது. ராகு தசாவிற்க்கு முன்பு வந்த தசாவில் அந்தளவுக்கு இவருக்கு பலன் கொடுக்கவில்லை. ராகு தசா நல்ல பலனை கொடுத்துக்கொண்டு இருக்கின்றது.
ராகு தசாவை நன்றாக பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றார். ராகுவும் இவருக்கு கொடுத்துக்கொண்டு இருக்கின்றது. இவருக்கு ஒன்பதாவது வீட்டில் ராகு அமர்ந்ததால் இவர் ஒரு கோவிலை தன் பராமரிப்பில் வைத்துக்கொண்டு அதற்கு செய்துக்கொண்டு வருகிறார்.
ராகு ஒன்பதாவது வீட்டில் இருந்தால் நல்ல பக்தியை கொடுக்கும். அதுவும் ராகு தசா நடைபெறும்பொழுது எப்படி இருக்கும். சமுதாயத்தில் நல்ல பெயர் இவருக்கு ஏற்படுத்திக்கொடுத்துவிட்டார் ராகு பகவான்.
ராகு ஒன்பதாவது வீட்டில் இருந்தால் நல்ல பக்தியை கொடுக்கும். அதுவும் ராகு தசா நடைபெறும்பொழுது எப்படி இருக்கும். சமுதாயத்தில் நல்ல பெயர் இவருக்கு ஏற்படுத்திக்கொடுத்துவிட்டார் ராகு பகவான்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
Sir, maandhi also with ragu in 9th house. How he is not affecting ragu dasa.
வணக்கம் மாந்தி ஒன்றும் செய்யவில்லை நண்பரே. இவர் எனக்கு நன்றாக தெரிந்தவர் தான். நல்லா இருக்கின்றார்.
Post a Comment