Followers

Thursday, November 21, 2013

நல்ல நேரம்


ணக்கம் ண்பர்களே!
                     ஒரு சாதனையாளன் என்பவன் பிரம்மமுகூர்த்தில் எழ வேண்டும். அப்பொழுது மட்டுமே அவனால் வெற்றி பெறமுடியும். பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்துவிட்டால் போதும் அனைத்தும் வெற்றி. ஒருவர் பிரம்மமுகூர்த்தத்தில் எழுவது என்பது கடினமான ஒன்று ஆனால் அதனை தினமும் செய்யும்பொழுது விடியற்காலையில் எழுவதால் மனதிற்க்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள்.

என்னிடம் வியாபாரத்திற்க்கு உதவி கேட்டு வருபவர்களிடம் சொல்லும் செய்தி இது விடியற்காலையில் எழுந்துவிடு என்று தான் சொல்லுவேன்.அது தான் எங்களால் முடியாது என்று சொல்லுவார்கள். அந்த நேரத்தில் தான் நாங்கள் நன்றாக தூங்குவோம் என்பார்கள்.விடியற்காலையில் எழுவது என்பது இரவில் விரைவில் படுத்துவிடவேண்டும் அப்பொழுது விடியற்காலையில் எழுந்துவிடலாம்.

அதிகபட்சம் பத்து மணிக்குள் தூங்கிவிட வேண்டும். இப்பொழுது எல்லாம் யாரும் அப்படி தூங்குவது கிடையாது. மணி பனிரெண்டு வரை உட்கார்ந்துக்கொண்டு டிவி பார்ப்பது அல்லது வேறு வேலை எதையாவது செய்வது இப்படி செய்யும்பொழுது விடியற்காலையில் எழுவது கடினம்.

நான் காயத்ரி மந்திரத்தை செய்ய சொல்லும்பொழுது கூட விடியற்காலையில் எழவேண்டும் என்று சொல்லுவது உண்டு. பிரம்மமுகூர்த்தம் நேரத்தில் மட்டுமே நல்ல சக்தியை நாம் உள்வாங்க முடியும். ஆத்மாவிற்க்கு நல்ல பலனை ஏற்படுத்துவது அந்த நேரம் மட்டுமே.

ஒரு நண்பரிடம் பேசும்பொழுது நீங்கள் பிரம்மமுகூர்த்ததில் எழுங்கள் என்று சொன்னேன். அவர் சரி சார் அந்த நேரத்தில் எழுந்துவிட்டு உடனே மறுபடியும் தூங்கிவிடலாமா என்றார். அப்படி செய்யகூடாது. விடியற்காலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை நீங்கள் தூங்ககூடாது. பிரம்மமுகூர்த்ததை பயன்படுத்தினால் வாழ்க்கையில் வெற்றி பெறுவது எளிதான காரியம்.

என்ன நண்பர்களே நாளையில் இருந்து எழுந்துவிடுவீர்களா?

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

ATOMYOGI said...

வணக்கம்!
நாளை முதல் முயற்சி செய்கிறேன்....
நன்றி.