Followers

Monday, November 4, 2013

சந்திராஷ்டம் பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                    மனதுக்காரகன் என்று போற்றப்படும் சந்திரன் ராசிக்கு எட்டிற்க்கு வரும்பொழுது சந்திராஷ்டமம் என்று அழைக்கிறோம். உனக்கு இன்று சந்திராஷ்டம் என்று சொன்னால் ஆன்மீகத்தை நம்பாதவர்களும் பயம்கொள்கிறார்கள். 

சந்தினை வைத்து தான் தினப்பலனை கணிக்கப்படுகிறது. ஒரு கோச்சார பலனுக்கு அப்படி ஒரு சக்தியா என்று நாம் ஒரு சமயத்தில் நினைத்து பார்க்கலாம். உண்மையில் சந்திரன் எட்டிற்க்கு வரும்பொழுது பயம்கொள்ள தான் வேண்டும். அன்றைய நாளில் பிரச்சினை எங்கிருந்தாவது நமக்கு வந்து விடும். ஏதோ ஒரு அசம்பாவிதம் நடைபெறும்.

சந்திரன் வழியாக தான் அதிகப்பட்ச கிரகங்கள் நமக்கு பலனை தருகிறது. அதனை ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும். சந்திரன் மறையும்பொழுது நமக்கு கிரகங்களின் நல்ல பலன் கிடைப்பதில்லை. அதனால் நமக்கு பிரச்சினை ஏற்படுகிறது. 

சந்திராஷ்டம தினத்தில் பல பிரச்சினை ஏற்படும். ஒரு சிலருக்கு சந்திராஷ்டம தினத்தில் மரணம் கூட ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்களின் ஜாதகத்தில் ஒவ்வொரு மாதத்திலும் எந்த நாளில் அதிக பிரச்சினையை ஏற்படுத்தியது என்று குறித்துக்கொண்டு வந்தால் அது சந்திராஷ்டம நாளாக இருக்கும்.

சந்திராஷ்டமத்திற்க்கு என்ன பரிகாரம்

பல பேர்கள் இதற்கு பல பரிகாரங்களை சொன்னாலும் நான் சொல்லும் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் கண்டிப்பாக அந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நாளாக இருக்கும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையை சாத்தி வழிப்பட்டுவிட்டு வாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

KJ said...

Sir, wat s relation between anuman and chandran.