வணக்கம் நண்பர்களே!
கண்திருஷ்டியை பார்த்தவருகிறோம் அதில் பரிகாரத்தையும் பார்த்தோம். தொடர்ந்து இப்பதிவிலும் பார்க்கலாம்.
வீட்டின் வாசற்படியில் கற்றாலையை கட்டி வைப்பதும் ஒரு சிறந்த கண்திருஷ்டி பரிகாரம். அதேப்போல் வீட்டிற்க்குள் நுழைந்தவுடன் சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பூஜை போட்டு வைப்பதும் வருகின்ற நபர்களின் மனநிலையை சரிசெய்யும் இதுவும் கண்திருஷ்டி பரிகாரம்.
கருப்பு குதிரையின் லாடத்தை வாங்கி அதனை வீட்டின் வாசற்படியில் மாட்டிவைப்பதும் ஒரு சிறந்த கண்திருஷ்டி பரிகாரம். வீட்டிற்க்குள் எந்த தீயசக்தியும் நுழையவிடாமல் இந்த லாடம் தடுக்கிறது. குதிரையில் எந்த ஒரு புள்ளியும் இல்லாமல் இருக்கவேண்டும்.
பல பேர் இதில் ஏமாற்றிவிடுகிறார்கள். கருப்பு குதிரையின் லாடம் என்று வேறு குதிரையின் லாடத்தை கொடுத்துவிடுகிறார்கள். இதன் நம்பகதன்மையை பொருத்து வாங்கி மாட்டிக்கொள்ளுங்கள். கருப்பு குதிரையின் லாடம் கிடைப்பது கடினமாக இருக்கின்றது.
கண்திருஷ்டி விநாயகர் என்றே ஒரு விநாயகர் இருக்கிறார். இவரின் படத்தை வாங்கி வடக்குதிசை நோக்கி வைத்து வழிபட்டால் கண்திருஷ்டி போகும் என்பார்கள். யோகநரசிம்மரின் படத்தை வைத்து வழிப்பட்டாலும் கண்திருஷ்டி போகும்.
வீட்டிற்க்குள் வாரத்திற்க்கு அல்லது மாதத்திற்க்கு ஒரு முறை கடல் தண்ணீரை கொண்டு வந்து தெளிக்கலாம். இதனால் வீட்டில் உள்ள துர்சக்திகள் வெளியில் போகும். கடல் நீர் இல்லாத ஊரில் பசுமாட்டின் கோமியத்தை வாங்கி தெளிக்கலாம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
5 comments:
அருமையான விஷயமுள்ள பகிர்வு .
எனக்குத் தெரிந்தவர் வீட்டில் அவ்வாறே ஒரு லாடம்
மாட்டி வைத்துள்ளனர். ஆனால் கருப்பு குதிரையா எனத்
தெரியாது .
இப்போது தான் நாட்டு மருந்து கடைகளில் கோமியம் மற்றும்
கங்கா ஜாலம் கிடைக்கிறதே . வாங்கி தெளித்தால் போயிற்று ......
அசுபங்கள் . வெள்ளெருக்கு வேரையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்
என நினைக்கிறேன் .
அலைகடலின் அருகாமையில் இருப்பதால் கடல்நீர்
அள்ளுதல் எனக்கொன்றும் சிரமம் அல்ல. அடிக்கடி
அதனைக் கொண்டு வந்து என் கிறிஸ்டல் மாலைகளைக்
கழுவிக் கொள்ளுதல் என் வழக்கம்.
தகவலுக்கு நன்றி மேடம்
Very Nice and usefull information to all viewers.
Sir, I heard below things also.
1)putting lemon in a water
2)cut lemon in two slice and wrap it with kungumam and place it near to door.
தகவலுக்கு நன்றி sir
தகவலுக்கு நன்றி sir
Post a Comment