வணக்கம் நண்பர்களே!
மனிதன் பிறவி எடுக்கிறான் என்று நம்புகிறது இந்துமதம். சோதிடம் பார்ப்பதே அதனை தெரிந்துக்கொள்ள மட்டுமே. எந்த ஒரு பிறவியும் முடிந்தளவுக்கு உங்களை இறைவனிடம் கொண்டு செல்ல வைப்பதற்க்கு வழியை கொடுக்கிறது. நீங்கள் இறைவனை அடைய நினைத்தீர்கள் என்றால் அதனை கடைபிடித்து போகலாம் அல்லது பிறவியிலேயே சிக்கி கொண்டு துன்பபடலாம்.
நீங்கள் பிறவியில் சிக்குவீர்களா அல்லது இறைவனை அடைவீர்களா என்பதை முடிவு செய்பவர் தசாநாதன்.
உங்களின் ஜாதகத்தில் அதற்குண்டான தசா நடைபெறவேண்டும். ஜாதகத்தில் அனைத்து வீடுகளும் வேலை செய்யும் ஆனால் நீண்ட நாள்கள் தன் பிடியில் வைத்திருக்கும் தசாநாதர்கள் மிக முக்கிய பங்கு பெறுகிறார்கள்.
நீங்கள் ஆன்மீகத்திற்க்கு செல்வதற்க்கு சிறந்த தசாவாக குரு மற்றும் கேது தசா மிகப்பெரிய வழியை ஏற்படுத்திக்கொடுப்பார்கள். ராகு தசாவும சம்பந்தப்பட்ட ஜாதகத்தை பொருத்து ஏற்படுத்திக்கொடுக்கும். அனைத்து கிரகங்களும் இந்த வேலையை செய்தாலும் இந்த மூன்று கிரகங்கள் அதிகமான வாய்ப்பை ஒருவருக்கு ஏற்படுத்திக்கொடுக்கிறது.
குரு கேது தசா நடைபெற்றால் உங்களுக்கு வழிகாட்டி சரியாக அமைவார்கள். வழிகாட்டி இருந்தால் தானே தெரியாத ஊருக்கு பயணம் செய்யமுடியும். ஒருவருக்கு இந்த தசா ஆன்மீகத்திற்க்கு மிக முக்கியமான தசாவாக இருக்கின்றன.
ஒருவருக்கு சனிதசா நடைபெற்றால் அவர் இதுவரை ஏற்பட்ட ஜென்மங்களில் கர்மங்களை கழிக்க சனிதசா அவருக்கு வழி செய்துக்கொடுக்கும். நல்லது செய்தால் நல்லது நடக்கும் அல்லது கெட்டது செய்தால் கெட்டது அதிக நடக்கும். உங்களின் ஜென்மகணக்கு சரி செய்வதற்க்கு வாய்ப்பை தருவரார்.
இறைவனிடம் போய் சேர்வதற்க்கும் இல்லறத்தில் கிடந்து தவிப்பதற்க்கும் சனி அமரும் வீட்டை பொருத்து அது அமையும். சனி லக்கினாதிபதியாகி எட்டாவது வீட்டில் அமர்ந்தால் அவரால் ஆன்மீகத்தில் உச்சத்திற்க்கு சென்று பிறவா நிலையை அடையமுடியும். அதற்க்கான தசா நடைபெறவேண்டும். சனி என்பது கர்ம காரகன் என்று வருவதால் அதிகமாக நன்மை செய்வதைவிட கெடுதலை அதிகமாக சந்திக்க வேண்டிவரும்.
ஜாதகத்தில் அமரும் கிரகங்களின் நிலையை வைத்து ஒவ்வொரு கிரகங்களும் செயல்படும்.தசாநாதர்கள் ஆன்மீகமாக அமைந்தால் பிறவியை கடக்கமுடியும். இடையில் வரும் புத்திநாதர்கள் அவவப்பொழுது சிறிய காலத்திற்க்கு மட்டும் காட்டிவிட்டு செல்வார்கள். நீண்ட நாட்கள் தசாவின் பிடியில் இருக்கும் ஒருவருக்கு ஆன்மீகத்தில் உயரமுடியும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment