Followers

Tuesday, August 6, 2013

சனிக்கு பரிகாரம் :குலதெய்வ விருந்து


வணக்கம் நண்பர்களே!
                     சனிக்கு ஒரு பரிகாரத்தை நமது குலதெய்வம் வழியாக உங்களுக்கு சொல்லுகிறேன்.

சனி கிரகம் என்பதே கூட்டமாக இருப்பதை குறிக்கும் ஒரு கிரகம். இன்றைய சூழலில் கூட்டுகுடும்பம் என்பது எல்லாம் இல்லை என்றே சொல்லலாம். நவீன உலகம் என்று இன்று என்ன செய்கிறோம் என்றால் அனைவரும் தனித்தனியாக வாழ ஆரம்பித்துவிட்டோம்.

அண்ணன் தம்பியாக இருவர் பிறந்தால் கூட அவர்கள் தனியாக சென்று வாழ ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் எல்லாம் ஏதாவது விழாக்களில் தான் சந்தித்துக்கொள்கிறார்கள். இப்படி இருக்கும் உலகத்தில் தனிநபரின் ராசிக்கு ஏழரை சனி வந்தவுடன் அவர்களுக்கு சனியின் கொடூர தாக்கம் அதிகமாக இருக்கிறது. 

ஏழரை காலத்திலும் அஷ்டமசனியின் காலத்திலும் சனியின் தொல்லை அதிகமாக இருக்கிறது. மனிதர்கள் கூட்டாக இருந்தால் சம்பாதிப்பது சேமிக்க முடியாது அதனால் தனிக்குடித்தனம் சென்று சேமிக்கிறார்கள் அந்த சேமிக்கும் பணத்தை இப்படி சனியின் பிடியில் ராசி வரும்பொழுது அதிகமான இழப்பீட்டை சந்திக்கிறார்கள். சேமித்த பணத்தை இழக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

பழைய காலத்தில் இந்தளவுக்கு இந்த சனியின் தாக்கம் இல்லை என்றே சொல்லலாம். ஏன் என்றால் கூட்டு குடும்பமாக வாழ்ந்தார்கள். கூட்டுக்குடும்பமான இன்றைய காலத்தில் வாழமுடியாத ஒரு சூழலை ஏற்படுத்திவிட்டார்கள்.

நீங்கள் தனிக்குடும்பமாக இருந்தால் நீங்கள் செய்யவேண்டியது. குலதெய்வத்திற்க்கு சென்று உங்களின் பங்காளிகள் மற்றும் உறவினர்களை அழைத்து அனைவருக்கும் ஒரு விருந்தை கொடுத்துவிடுங்கள். குலதெயவ வழிபாடும் சனிக்கு பரிகாரம் தான். உறவினர்களுக்கு விருந்து கொடுக்கும்பொழுது அனைவரையும் சந்தித்து பழகும் வாய்ப்பு இருக்கும். உங்களின் குழந்தைகளுக்கு உங்களின் பரம்பரை பண்பாட்டை பற்றி தெரியும் வாய்ப்பு ஏற்படும். உங்களின் குழந்தைக்கு அது மிகப்பெரிய தெம்பை தரும். எனக்கு பல பேர்கள் இருக்கிறார்கள் இந்த சமுதாய்த்தில் என்னால் எதனையும் துணிவாக செய்ய ஒரு வழி இருக்கும்.

சனிக்கு மிக சிறந்த வழிபாடு குலதெய்வத்தின் கோவிலில் உறவினர்களுக்கு விருந்து கொடுப்பது. சனியின் கொடூர தாக்கத்தின் இருந்து நீங்கள் விடுபட வேண்டுமா உடனே இந்த வழிப்பாட்டை மேற்க்கொள்ளுங்கள்.

இன்றைய தேதியில் குலதெய்வத்திற்க்கு செல்வது என்பது கடினமான ஒன்றாக தான் பல பேருக்கு இருக்கிறது. அப்படியே அங்கு சென்று வரும் உறவினர்களோடு அன்பாக பழகுகிறேன் என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாடு அரசின் தீர்த்தத்தை பருகிவிட்டு சண்டைபோட்டுக்கொண்டு இருக்ககூடாது. அனைவரும் அன்பாக பழகவேண்டும் என்று ஒரு வாய்ப்பை தான் இது மாதிரி நிகழ்ச்சிகளை வைத்துள்ளார்கள் சண்டை போடுவதற்க்கு அல்ல.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: