வணக்கம் நண்பர்களே!
திருவண்ணாமலை கிரிவலம் இப்பொழுது நான் செல்வதில்லை. ஒரு சில காலங்களில் தொடர்ந்து கிரிவலம் சென்று இருக்கின்றேன். எந்த கோவில்களிலும் இல்லாத ஒரு சிறப்பு இந்த கோவிலில் இருக்கின்றது. அதாவது அஷ்ட திக்கும் உள்ள அதிபதிகள் வணங்கிய ஒரு தலம் என்பது தான் அதன் சிறப்பு.
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும்பொழுது அஷ்டதிக்கும் உள்ள பாலகர்களின் ஆசி நமக்கு கிடைக்கின்றது. இதனைப்பற்றி பழைய பதிவுகளில் சொல்லிருந்தாலும்மீண்டும் உங்களுக்கு புதுமையுடன் சொல்லுகிறேன்.
நீங்கள் ஏதோ ஒரு காரியத்தை முடிக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டு ஒரு தெய்வத்திடம் வேண்டுதல் வைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த தெய்வம் உங்களுக்கு அதனை செய்யும் ஆனால் நீண்ட நாட்கள் ஆகும் அதனால் திக் அதிபதிகளின் பலம் கிடைத்தால் உடனே அந்த செயல் நடைபெற தொடங்கும்.
ஒவ்வொரு திசை அதிபரின் பலம் நமக்கு கிடைக்கும்பொழுது எளிதாக வெற்றி அடையமுடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது திருவண்ணாமலை கிரிவலம். திருவண்ணாமலை கிரிவலம் ஒரு முறை மட்டும் சென்றால் போதாது. பல முறை போகவேண்டும் அப்பொழுது மட்டுமே நமக்கு அஷ்டதிக் பாலகரின் பலம் கிடைக்கிறது. இதனை பெளர்ணமி மட்டும் தான் போகவேண்டும் என்பது கிடையாது. சாதாரண நாட்களிலும் செல்லலாம்.
நமது கர்மவினையை பொறுத்து அது அமைகிறது. ஒரு சிலருக்கு ஒரு முறை சென்றாலே போதும் நடந்துவிடுகிறது. ஒரு சிலருக்கு பல முறை செல்லவேண்டியிருக்கிறது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment