வணக்கம் நண்பர்களே !
என்னிடம் பல நண்பர்கள் சோதிடவகுப்பு நடத்துகிறீர்களாக என்று கேட்கிறார்கள். பல பேர் பல்கலைகழகத்தில் படிக்கும் நண்பர்களே இப்படி கேட்கிறார்கள். இந்த செயல் இவர்கள் என்மீது வைததிருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.
நான் சோதிடபுத்தகமே அதிகம் படித்தது கிடையாது. ஒரு சில புத்தகங்களை படித்திருக்கிறேன் அதுவும் நூலகத்திற்க்கு சென்று படித்தது உண்டு. இரண்டு புத்தகம் எனது நண்பர்கள் பரிசாக கொடுத்தார்கள் அவ்வளவு தான் என்னிடம் இருப்பது. அனைத்தும் அனுபவத்தில் கற்றேன் என்று தான் சொல்லவேண்டும். பல பேர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அவர்களின் ஜாதகத்தோடு ஒப்பிட்டு பார்த்ததால் வந்த ஒன்று மட்டுமே எனது சோதிட அறிவு.
எனது குரு வந்தவுடன் சோதிடத்தில் அதுவும் கேரளசோதிடத்தில் உள்ள ஒரு சில விசயங்களை சொல்லி்க்கொடுத்தார். சோதிடத்தை வைத்து வருகின்ற நபர்களுக்கு எப்படி பிரச்சினையை தீர்ப்பது என்பதைப் பற்றி சொல்லிக்கொடுத்தார். ஒவ்வொருகிரகத்தையும் எப்படி சாந்தப்படுத்துவது மற்றும் பல சூட்சமங்களை சொல்லிக்கொடுத்தார். கேரளா சோதிடம் பரிகாரத்தில் வெற்றி பெற்ற ஒன்று அதனை பற்றி எல்லாம் சொல்லிக்கொடுத்தார்.
சோதிடத்தை பல்கலைகழகத்தில் படிப்பதால் என்ன லாபம் என்று எனக்கு தெரியவில்லை. படிப்பதும் தவறு இல்லை. அனைத்தும் தெரிந்துக்கொள்ளவேண்டியது ந்லலது. சோதிடத்தை நாம் எங்கு படித்தாலும் நாம் அதனை கையாளும் விதத்தில் தான் அதன் வெற்றி இருக்கிறது. இப்பொழுது நான் எழுதுவது எந்த ஒரு பதிவும் எனது சொந்த அனுபவத்தை தவிர வேறு எந்த புத்தகத்திலும் எடுத்து எழுதுவது கிடையாது. நாம எந்தளவுக்கு பலன் சொல்லிகிறோமோ அந்தளவு வெற்றி இருக்கும். பலன் சொல்லி சம்பாதிக்கலாம் என்று நினைத்தால் ஒரு நாளும் தேறமுடியாது.
வருபவர்களுக்கு சரியான தீர்வை நாம் வழங்கவேண்டும் அப்படி தீர்வு கொடுக்கவில்லை என்றால் ஒரு ஆள் நம்மை தேடிவரமாட்டார்கள். இப்பொழுது எல்லா சோதிடர்களிடமும் சென்றாலும் சனிக்கு என்ன பரிகாரம் சொல்லுவார்கள் என்றால் காலபைரவரை வணங்குங்கள் என்று சொல்லுவார்கள் அல்லது சனிபகவானை வணங்குங்கள் என்று சொல்லுவார்கள்.
நம்மிடம் சோதிடம் பார்ப்பவர்கள் கண்டிப்பாக நம்மிடம் மட்டும் சோதிடம் பார்ப்பதில்லை பல பேர்களிடமும் சோதிடம் பார்ப்பார்கள் அவன் சொன்னதே இவனும் சொல்லுகிறான் என்று சொல்லுவார்கள். காலபைரவர் என்பவர் சனியின் குரு என்று சொல்லுவார்கள். எத்தனை பயலுங்க குருவின் பேச்சை கேட்கிறார்கள். அவன் இஷ்டம்போல் செயல்படுவார்கள். அனைவரும் போல் ஒரே மாதிரி சொல்லக்கூடாது. சரியான அதே நேரத்தில் அவர்களுக்கு எளிதான முறையில் நாம் சொல்லும்பொழுது நம்மை தேடிவருவார்கள்.சோதிடபாடத்தை படித்தாலும் அவர்களுக்கு தீர்வு சொல்லும் வழியையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
நான் சோதிடவகுப்பு நடத்தவில்லை. ஜாதககதம்பம் மட்டும் தான் நடத்துகிறேன். சோதிடவகுப்பு நடத்தும் நேரம் வந்தால் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment