வணக்கம் நண்பர்களே!
ராகு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். பாபக்கிரகங்களின் வீட்டை ராகு அடைந்து ராகு தசா நடந்தால் தனது குடும்பத்தின் நாசத்தை தரும். குடும்பத்தில் வறுமை சூழ்ந்துக்கொண்டு குடும்பத்தில் உள்ள நபர்களை ஆட்டிபடைக்கும். எப்படா விடியும் என்ற மனநிலையை உருவாக்கிவிடுவான். அரசாங்கத்தில் இருந்து எதிர்ப்பையும் ஏற்படுத்திவிடும். எதிரிகளிடம் பயத்தையும் ஏற்படுத்திவிடுவான்.
எனக்கு ராகு தசா இளமை பருவத்தில் நடைபெற்றது. ஒன்பதாவது வீட்டில் அமர்ந்து கெடுதல் தரும் நிலையில் தசா நடைபெற்றது. ராகு சுயபுத்தியும் சரி அதற்கு பிறகு வந்த அனைத்து புத்தியும் வாட்டி எடுத்தது. சும்மா அடி என்றால் அந்த அடி. படிப்பில் இருந்து அனைத்தும் நாசம். குலதெய்வத்தின் அருளால் அப்பா தப்பித்தார்.
மனது அலைபாய்ந்தது. ராகு மட்டும் அதிகமாக கை வைக்கிறது மனதில் தான். மனதை கெடுத்து ஊரார்களின் பேச்சுக்கு காரகமாக வைக்கிறார். அந்த நேரத்தில் அந்தளவுக்கு சோதிடத்தை பார்த்து அதனை சரி செய்வதற்க்கு பெரிய சோதிடர்கள் இல்லை. நம்மாலும் போகமுடியவில்லை. கோவிலுக்கும் அலையவைத்தது. சோதிடத்தை படிக்க வைத்தாலும் முதலில் அதில் முழுமை பெறாததால் ராகுவின் பிடியில் இருந்து தப்பமுடியவில்லை.
ராகு தசாவின் மொத்த காலமும் இப்படி இருந்தால் என்ன செய்வது. குடும்பம் தெருவிற்க்கு வந்துவிட்டது என்றே சொல்லவேண்டும். நமக்கு குலதொழில் விவசாயம் என்பதால் விவசாயத்தில் இருந்து ஒரு பைசா கூட லாபம் கிடையாது. குலதெய்வத்தின் அருளால் நிலம் மட்டும் கைவிட்டு போகவில்லை.
உண்மை சொல்லபோனால் சுற்றிவிட்டு அடி அடி என்று அடித்தது. பித்ருதோஷம் இருந்ததால் அப்படி ராகு தசா அடித்தது என்று சொல்லலாம். எதிரியை பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும். நான் சும்மா இருப்பேன் ஆனால் என்னிடம் வந்து பிரச்சினையை செய்துவிட்டு போவார்கள். சத்தியமாக என்னால் அவர்களுக்கு பிரச்சினை இருந்து இருக்காது ஆனால் அவர்கள் என்னிடம் மோதுவார்கள். எல்லாம் பூர்வபுண்ணியத்தின் எதிரி ஏன் என்றால் இவர்கள் என்னை என்ன செய்தார்கள் என்று நினைக்க கூட எனக்கு அந்த நேரத்தில் மனது ஒரு நிலையில் இல்லை என்றே சொல்லவேண்டும்.
ஏன் எதிரியை பற்றி சொல்லுகிறேன் என்றால் அந்த நேரத்தில் ஒரு சாமியார் போல் வாழ்ந்தவன். எப்படி எனக்கு எதிரி உருவாகமுடியும். என்னிடம் ஒன்றும் இல்லை பிறகு எப்படி அவர்கள் என்னை எதிர்க்கிறார்கள் என்றே எனக்கு தெரியாது. இப்பொழுது நினைத்து பார்ப்பேன் இவர்கள் எல்லாம் நம்மளை இந்த மாதிரி செய்து இருக்கிறார்களே என்று நினைப்பேன்.நம்மிடம் ஒன்றும் இல்லை என்று தானே இப்படி செய்தார்கள் என்று நினைத்து இருக்கிறேன். இப்பொழுது அப்படி இல்லை என்னை பார்த்து தான் பயந்து இருக்கிறார்.
இப்பொழுது என்னிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு தசாநாதனுக்கு பரிகாரம் செய்யுங்கள் என்று சொல்லுவதின் அர்த்தம் நான் பட்டேன் பிறர் படக்கூடாது என்று நினைப்பதால் செய்ய சொல்லுகிறேன்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment