Followers

Wednesday, August 21, 2013

ஆன்மீக அனுபவங்கள் 107


வணக்கம் நண்பர்களே!
                     கடவுளின் அவதாரத்தை பார்த்தீர்கள் என்றால் நிறைய அவதாரங்கள் வடஇந்தியாவில் நடைபெற்று இருக்கும். தென்இந்தியாவில் அவதாரங்கள் இருக்காது. இதற்கு காரணம் என்ன என்று பார்த்தால் ஒன்று விளங்கும்.

வடஇந்தியாவில் உள்ள மக்கள் கடவுளிடம் அதிகமான பக்தியை வைத்திருப்பார்கள். கடவுள் பக்தியை மட்டுமே விரும்புவார். நம்ம ஆட்கள் அதிக ஞானத்தோடு இருப்பார்கள். அந்த காலத்தில் இருந்து பார்த்தீர்கள் என்றால் கடவுளைப்பற்றி சொல்ல அவரின் வேதங்களை பற்றி சொல்ல இங்கிருந்து தான் ஞானிகள் சென்று இருப்பார்கள். ஞானம் உள்ளவர்களுக்கு கடவுள் அவதாரத்தை எடுக்க வேண்டியதில்லை. ஏன என்றால் கடவுளை பற்றி அவன் மிகப்பெரிய ஆராய்ச்சி செய்து வைத்திருப்பான்.

கடவுளைப்பற்றி இப்படி இப்படி இருப்பார். இந்த வழியில் சென்றால் அவரைப்பற்றி நாம் தெரிந்துக்கொள்ளலாம் என்று ஞானியர்கள் சொல்லுவார்கள். இவர்களின் ஆரம்ப நிலை எப்படி இருந்திருக்கும். கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகத்தோடு தான் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்திருப்பார்கள்.

பக்தியில் அப்படி கிடையாது. கடவுள் இருக்கிறார் அவரை நாம் வணங்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோள் உடன் வணங்குவார்கள். அவர்களுக்கு அவரைப்பற்றி ஆராய்ச்சி தேவையில்லை அவர் இருக்கிறார் அவ்வளவு தான் அவர்களின் நிலை இதனை கடவுள் பார்க்கிறார். அவர்களின் குரலுக்கு கூப்பிட்டவுடன் ஓடோடி வருகிறார்.

நாம் என்ன செய்வோம் அனைத்தும் ஆராய்ச்சி செய்து அதனை ஒப்புக்கொள்வோம். வேதத்தைப்பற்றி சொல்லுவதற்க்கு என்று இங்கிருந்து தான் சென்று இருப்பார்கள்.

பெரிய ஞானிகள் எல்லாம் இங்கிருந்து சென்று இருப்பார்கள். கடவுள் இதனை விரும்புவதில்லை. மக்களிடம் பக்தி இருக்கிறதா என்று பார்த்துவிட்டு அவர்களுக்கு காட்சி கொடுத்துவிடுவார். அதனால் நீங்கள் ஆராய்ச்சி செய்வதை விட்டு பக்தியை செலுத்துங்கள் கடவுள் உங்களுக்கு தெரிவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Naan konjam aaraychi pannitturkken appo adhai vittudava?