வணக்கம் நண்பர்களே!
உபவேதங்களைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1. ஆயுர் வேதம் பிரம்மா தன்வந்தரி ஆகியோரால் வெளியிடப்பட்டதாகும் இவ்வேதம் ஒருவனுடைய ஆயுள் தேகம் இந்திரியம் முதலியவைகளைப் பற்றி விரிவாக கூறுவதாகும். இவைகள் தர்ம சாஸ்திரத்தை ஓட்டி இருப்பதால் ப்ராதஸ்நாதம், நியமாஹாரம் முதலியவைகளை கடைப்பிடிப்பவர்களுக்கு வியாதியே வராது. அப்படி நோய் வந்தாலும் வந்தவர்களுக்கு சிகிச்சையும் சொல்லப்பட்டுள்ளது. இதை சரகர் சரகஸம்ஹிதை என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.
2 . தனுர் வேதம் இவ்வேதத்தை விஸ்வாமித்ரர் வெளியிட்டார். இது அஸ்தர சாஸ்திரங்களை பற்றியதாகும். யந்தர விதி, மந்திர விதி என இரு பாகங்கள் உண்டு. சூலம், பானம், கத்தி, சக்கரம் முதலியவை யந்திர விதியாகும் . மந்திரவிதி என்பது தர்மயுத்தம் நடக்கும்போது மேகா அஸ்திரம் ,வாருண அஸ்திரம் ,கருடாஸ்திரம் முதலியவைகள் ஆகும்.
3. காந்தர்வ வேதம் இவ்வேதம் பரதரால் இயற்றப்பட்டது இசை, வாத்யம் ,நடனம் முதலியவை விளக்கப்பட்டுள்ளது ஸ்ருதி,தாளம் தவறாமல் பக்தியுடன் இறைவனைப் பாடி துதிப்பவர்களுக்கு பகவான் அருள் உடனே கிடைக்கும் என்பதாகும்.
4. அர்த்த சாஸ்திரம் இவற்றில் பல உண்டு அதில் முக்கியமானவை ராஜ்ய விஷயமாக சுக்ர நீதி, காமந்தக நீதி, கெளடில்ய நீதி என்பதாகும். மிருகங்களை எப்படி அடக்குவது அவைகளின் பலன்களை எப்படி அடைவது போன்ற சாஸ்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. செடி கொடி மரம் இவைகள் இவ்வொன்றின் பயன் குணம் முதலியவையாகும். நட்சத்திரம் பஞ்சபூதம் முதலிய விவரம் பறவைகள் அவைகளின் சகுனம் 64 கலைகள், 18 வித்தைகள் முதலியன விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
இவைகளே நான்கு வேதம் கூறும் தத்துவங்களாகும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment