Followers

Tuesday, August 20, 2013

எதிரி தேவை


வணக்கம் நண்பர்களே!
                    நமது வாழ்க்கைக்கு எதிரியும் தேவை என்பதைபற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

நமது வாழ்க்கை ஒழுங்காக சென்று கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நமது வேலை உண்டு நாம் உண்டு என்று என்று எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் சென்றுக்கொண்டிருப்போம். ஒரு மனிதன் பிறப்பு எடுக்கும்பொழுது அவன் வழியாக ஏதோ ஒன்றை செய்ய கடவுள் நினைக்கிறார். 

மனிதன் சும்மா தூங்கிக்கொண்டு இருந்தால் அவனால் ஒன்றும் நடைபெறாது என்று எண்ணிக்கொண்டு கடவுள் ஒரு உந்து சக்தியாக செயல்பட்டு அவன் வழியாக காரியத்தை செய்யவைக்கிறார்.

ஆறாவது வீட்டு தசா என்ன செய்யும் ஒருவனுக்கு எதிரியை உருவாக்குகிறது. ஒருவனை ஒருவன் வந்து தாக்கும்பொழுது சம்பந்தப்பட்ட நபர் என்ன செய்கிறான். தன்னை காப்பாற்றிக்கொள்கிறேன். அவனை விட நாம் பலம் பொருந்தியவனாக ஆகவேண்டும் என்று எண்ணி இவன் உழைக்க ஆரம்பித்துவிடுகிறான். அவனின் உழைப்பால் பலபேருக்கு நன்மை நடக்கும். 

சோதிடத்தில் தீயவீடுகள் என்று சொல்லிக்கொண்டுருக்கும் வீடுகள் அனைத்தும் மிகமுக்கிய பொறுப்பை செய்கின்றன. ஒருவனை உயர்த்துவதில் இவர்கள் செய்யும் வேலையால் மட்டுமே ஒரு மனிதன் அதிகமாக உயர்கிறான் என்றே சொல்லவேண்டும். 

பல நண்பர்கள் இதனை படித்துவிட்டு சொல்லலாம் கஷ்டத்தை தாங்கமுடியவில்லை என்று சொல்லலாம். நீங்கள் அதனை வென்ற வரவேண்டும். நாம் உருவாகுவதே பல செல்களை வென்று தான் நாம் உயிர் எடுக்கிறோம். மிகப்பெரிய போராட்டமாக தான் நமது பிறப்பே இருக்கும்பொழுது வாழ்க்கையில் கஷ்டம் வரும்பொழுது நாம் அதனை கண்டு மலைக்க தேவையில்லை. போராடலாம். 

ஆறாவது வீட்டு தசாவால் நான் பல எதிரிகளை சந்தித்தேன். அந்த எதிரிகள் தான் என் வாழ்க்கைக்கு அடித்தளம் இட்டவர்கள் என்றே சொல்லவேண்டும். இதில் பூர்வபுண்ணிய எதிரி எனக்கு செய்த செயல் மிகப்பெரிய வளர்ச்சிக்கு வித்திட்டது என்றே சொல்லவேண்டும். நாம் சும்மா இருந்தால் இவர்கள் தான் தங்களின் முயற்சியால் நம்மை உயர்த்துக்கிறார்கள்.

எதிரிகளை உருவாக்குவதில் இரண்டு செயல் இருக்கிறது. ஒன்று நீங்களே உருவாக்கி கொள்வது. மற்றோன்று பூர்வபுண்ணியத்தால் வரும் எதிரி. பூர்வபுண்ணியம் வழியாக வரும் எதிரி நம்மை தேடிவந்து எதிர்த்துவிட்டு செல்வார்கள். நமக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இருக்காது ஆனால் நம்மை தேடிவந்து சண்டைபோடுவார்கள்.

எதிர்ப்பு வந்தால் நீங்கள் வளரபோகின்றீ்ர்கள் என்று அர்த்தம். ஆறாவது வீட்டு நாதனும் ஆறாவது வீட்டு தசாநாதனும் உங்களின் வாழ்க்கையை புரட்டிபோடுவதற்க்கு வருவார்கள் அதனை பயன்படுத்தி நீங்கள் முன்னேற்றம் அடைவதும் அல்லது வீழ்வதும் உங்களின் கைகளில் இருக்கின்றது. நமக்கு எதிரி தேவை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: