வணக்கம் நண்பர்களே!
இப்பதிவில் ஒரு உதாரண ஜாதகத்தை பார்க்கலாம். லக்கினம் விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய் மூன்றாவது வீட்டில் அமர்ந்திருக்கிறார். சுக்கிரனோடு சேர்ந்து அமர்ந்திருக்கிறார். இவரின் படிப்பு பள்ளி கல்வி மட்டுமே.
படிப்பு இல்லாததால் அரசாங்க வேலையில் சேரமுடியவில்லை. அரசாங்கத்தில் உள்ள அதிகாரிகளுக்கு கொஞ்ச நாள் டிரைவராக வேலை பார்த்தார் பிறகு அந்த வேலையை விட்டுவிட்டு டிராவல்ஸ் கார் ஓட்டிக்கொண்டுருந்தார்.
திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளன. பையன் ஒன்று பெண் ஒன்று இதில் பெண் மட்டும் இவருடன் பாசமாக இருக்கும். பையன் மற்றும் இவரின் மனைவி இவரை ஜென்மவிரோதியாக தான் பார்ப்பார்கள்.
இவருக்கு புதன் தசாவில் சுயபுத்தி மட்டும் நன்றாக இருந்தது பிறகு வந்த அனைத்து புத்தியும் சரியில்லை. இவருக்கு புதன் எட்டாவது வீட்டிற்க்கும் மற்றும் பதினோன்றாம் வீட்டிற்க்கும் காரகம் வகி்க்கிறார்.இரண்டாவது வீட்டில் அமர்ந்து தசாவை நடத்திக்கொண்டிருக்கிறார்.
இவருக்கு புதன் தசாவில் கேது புத்தி ஆரம்பத்தில் இருந்து இவர் தன்னுடைய வீட்டை கவனிக்காமல் வரும் அனைத்து சம்பளத்தையும் குடிப்பது மற்றும் ஜாலியாக இருப்பது மட்டுமே இவரின் வாடிக்கையாக வைத்திருந்தார். வீட்டை கவனிக்காமல் இருந்ததால் இவரின் மனைவி இவரை சண்டை போட்டு வீட்டை விட்டு துரத்திவிட்டது. இவர் தங்கியிருப்பது எங்கு வேலை பார்க்கிறாரோ அங்கேயே தங்குவது இவரின் பழக்கமாக இருந்தது..
புதன் தசாவில் ராகு புத்தியில் ஒரு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண் ஒரு மாதிரியாக பெண். இவரின் வருமானத்தை எல்லாம் அந்த பெண்ணிடம் இழந்தார். இவருக்கு புதன் தசாவில் குரு புத்தியில் அந்த பெண் இவரை விட்டு சென்றுவிட்டது.
இவர் கோபம் கொண்டு அந்த பெண்ணை ஒரு இடத்திற்க்கு அழைத்துக்கொண்டு சென்று அவரின் கழுத்தை அறுத்துவிட்டார். கழுத்தை அறுத்தவர் அந்த பெண் செத்துவிட்டது என்று எண்ணி அவர் விட்டுவிட்டு வந்துவிட்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவரகள் அந்த பெண்னை பார்த்து மருத்துமனையில் சேர்த்தார்கள். காவல்துறையின் வசம் இவர் மாட்டிக்கொண்டு இவர் சிறையில் பல நாட்கள் இருந்தார். புதன் தசாவில் குரு தசாவில் 1 வருடகாலம் சிறையில் இருந்து பிறகு வெளியில் வந்தார்.
புதன் எட்டாவது வீட்டின் காரகம் வகிப்பதால் இவருக்கு இப்படி ஒரு வாழ்க்கையை தந்தது. பதினோராவது வீட்டின் காரகத்துவம் வகித்தாலும் அந்த வீட்டு காரத்துவமும் அந்தளவுக்கு இவருக்கு கொடுக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
எட்டாவது வீட்டில் குருவும் சந்திரனும் சேர்ந்து அமர்ந்து இருக்கிறது. மணவாழ்க்கை நன்றாக அமையவில்லை. ராகுவும் களத்திர இடத்தில் அமர்ந்ததால் தகாத உறவு ஏற்பட்டது. அதற்கு தகுந்தார் போல் தசாவும் நடைபெற்றதால் இவர் நன்றாக மாட்டிக்கொண்டார். லக்கினாதிபதி மூன்றாவது வீட்டில் சுக்கிரனோடு சேர்ந்து அமர்ந்ததால் காமசுகத்தில் அதிகம் ஈடுபடும் வாய்ப்பு வந்தது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment