Followers

Thursday, August 1, 2013

சுகஸ்தானம் பகுதி 1


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். லக்கினாதிபதி மட்டும் நன்றாக இருந்தால் பற்றாது அதோடு வேறு சில வீடுகளும் நன்றாக இருக்க வேண்டும்.

லக்கினாதிபதியை விட சுகஸ்தானம் என்று சொல்லக்கூடிய நான்காம் வீடு நன்றாக இருக்கவேண்டும். ஏன் என்றால் அனைத்து சுகத்தையும் தரக்கூடிய வீடு எது என்றால் நான்காம் வீடு மட்டுமே. இந்த நான்காம் வீட்டைப்பற்றி பல பேர் சொல்லிருக்கிறார்கள் எப்படி சொல்லியுள்ளார்கள் என்றால் ஆதிகாலத்தில் உள்ள சோதிட புத்தகத்தை படித்துவிட்டு அப்படியே உள்ளது போல் சொல்லியுள்ளார்கள். உண்மையில் சோதிடம் என்பது அனுபவத்தில் படிக்கும் படிப்பிற்க்கு ஈடு இணையான ஒன்று கிடையாது. நீங்கள் சோதிடத்தில் நல்ல திறமையை வளர்க்க வேண்டும் என்றால் நீங்கள் தொழில்முறை சோதிடராக மாறும்பொழுது அனைத்து சூட்சமும் தெரியும்.

சுகஸ்தான அதிபதியின் நிலை மற்றும் அந்த வீட்டில் வந்து அமரும் கிரகத்தின் நிலை மற்றும் நான்காம் வீட்டை பார்க்கும் கிரகத்தின் நிலையை வைத்து சுகஸ்தானம் நன்றாக இருக்கிறதா என்று நாம் முடிவு செய்யவேண்டும். முதல் முதலாக நான்காம் வீட்டில் வந்து அமரும் கிரகம் என்பது அதிக பலனை அந்த வீட்டிற்க்கு கொடுக்கிறது. நான் பார்த்தவரை அதிகமாக வந்து அமரும் கிரகம் அதிகமான கெடுதலை அல்லது நல்லதை செய்கிறது.

நான்காம் வீடு முதலில் தாயாரின் நிலையை காட்டுகிறது. நமக்கு வாய்க்கும் தாயின் நிலை என்ன அவர் எப்படிபட்டவர் என்று காட்டுகிறது. ஒருவன் நன்றாக வளர வேண்டும் இந்த சமுதாயத்தில் நல்லவனாக பெயர் எடுக்கவேண்டும் என்றால் தாயாரின் வளர்ப்பு இருந்தால் மட்டுமே அது சாத்தியப்படும். ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கவேண்டும். தாயின் அரவணைப்பு இல்லாத குழந்தை வாழ்வது கடினமான ஒன்றாக இருக்கும். அப்படிபட்ட தாயின் நிலை எப்படி இருக்கும் என்று காட்டுவது நான்காவது வீடு. 

நமது தாயைப்பற்றி அதிகமாக சோதிக்ககூடாது ஏன் என்றால் அவள் எப்படிப்பட்டவள் என்றாலும் நமதுக்கு தாய் தான். முதல் தெய்வம் அது தான். இதனை நீங்கள் ஆராய்ந்து சொல்ல வேண்டியதில்லை. நமது தாய் நன்றாக இருப்பார்களா அல்லது அவரின் வாழ்க்கை கடினமாக இருக்குமா என்று காட்டுவது நான்காவது வீடு. 

உங்களின் ஜாதகத்தில் சுகஸ்தானம் கெடும்பொழுது உங்களின் தாய் கெட்டுவிடுவாள். கெட்டுவிடுவாள் என்றால் தாயாருக்கு வாழ்க்கை பிரகாசமாக இருக்காது. ஒரு சில தாய் இளம்வயதில் விதவையாகிவிடுவார்கள் அல்லவா அது எல்லாம் இந்த நான்காம் வீடு கெடுவதால் வருகின்ற துன்பம். நீங்களே பார்த்திருப்பீர்கள் உங்களுக்கு தெரிந்த இடத்தில் எப்படி என்றால் இவன் பிறந்தான் டா அப்பனை எடுத்துவிட்டான் என்று சொல்லுவார்கள். இவன் பிறப்பதற்க்கு முன்னால் அவர்கள் நன்றாக வாழ்ந்துக்கொண்டு இருப்பார்கள். இவன் பிறந்தவுடன் அந்த தாய்க்கு விதவையாகிறாள் என்றால் இவனின் ஜாதகத்தில் சுகஸ்தானம் கெட்டுவிட்டது என்று அர்த்தம். ஒரு சில பேருக்கு தாய் மரணமடைந்துவிடுவதும இந்த சுகஸ்தானம் கெடுவதால் வருவது மட்டுமே.

தொடர்ந்து பார்க்கலாம்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: