வணக்கம் நண்பர்களே!
கடந்த ஆன்மீக அனுபவங்களில் சுடுகாட்டைப்பற்றி பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இதிலும் கொஞ்சம் பார்க்கலாம்.
ஒருவர் இறக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அவரின் உடலை அந்தந்த வழக்கபடி இறுதி சடங்கை செய்கிறார்கள். ஒருவர் இறந்தால் அநத உடல் அனாதையாக மட்டும் விட்டுவிடகூடாது என்று பல பேர்கள் சொல்லியுள்ளார்கள். உங்களின் குடும்பத்தில் இருக்கும் ஒரு நபர் இறந்தால் அவரை அனாதையாக மட்டும் விட்டுவிடகூடாது அந்த குடும்பம் அழிந்துவிடும்.
தனிமனிதன் இறந்தால் கூட அவன் அனாதையாக இறந்தால் கூட அவனை உங்களின் செலவில் அடக்கம் செய்வது மிகப்பெரிய புண்ணியம் உங்களுக்கு சேரும். இதனை பல மகான்கள் சொல்லியுள்ளார்கள். உங்களின் கர்மா முற்றிலும் தீரவேண்டும் என்றால் இந்த செயலை நீங்கள் செய்யலாம்.
சோதிடத்தில் ஒருவன் இறந்தவுடன் அவனின் உடல் என்ன ஆகும் என்றும் சொல்லியுள்ளார்கள். அதாவது அந்த உடலை புதைப்பார்களா அல்லது எரிப்பார்களா அந்த உடல் நாய் கடித்து தின்னுமா அல்லது கழுகுக்கு இரையாக போகுமா என்று எல்லாம் சோதிடத்தில் சொல்லியுள்ளார்கள். ஏன் நமக்கு ஏற்படும் இறப்பில் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என்று கூட சொல்லியுள்ளார்கள்.
இறப்பை காட்டுவது எட்டாவது வீடு என்றால் நமது உடலுக்கு நடைபெறும் கதியை பற்றி சொல்லுவதற்க்கு பனிரெண்டாவது வீட்டை வைத்து சொல்லலாம். அதனை எல்லாம் வரும் நாட்களில் பார்க்கலாம்.
எனக்கு ஒரு தெரிந்த மருத்துவர் ஒருவர் இருந்தார். அந்த மருத்துவர் அரசு மருத்துவமனையில் பெரிய பதவில் இருந்தார்.பல வருடங்களுக்கு முன்னர் என்னிடம் அவர் சொன்ன செய்தியை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.
ஒருவர் உறுப்பு தானம் செய்து தவறு என்று சொன்னார். இறந்த உடல் தானே அதனை வெட்டி வாழும் ஒருவருக்கு கொடுக்கப்படலாம் என்று தான் நாம் தானம் செய்துக்கொண்டு இருக்கிறோம். பிறக்கும்பொழுது எப்படி இருந்தமோ அதைபோல் உடலை இறக்கும்பொழுது அப்படியே கொடுக்கவேண்டும். அப்பொழுது மட்டுமே அந்த உடல் ஒரு முழுமையை பெறுகிறது என்று சொன்னார்.
இந்த காலத்தில் இதனை இப்படி சொல்லுவதே ஒரு பெரிய எதிர்ப்பு வரும் ஆனால் அந்த மருத்துவர் என்னிடம் சொன்னதை பல காலங்களுக்கு பிறகு எனக்கு தெரிந்தது. அந்த மருத்துவர் சரியாக தான் சொல்லியுள்ளார் என்று எனக்குள் தோன்றும். பல விசயங்களை நாம் வெளியில் சொல்லும்பொழுது அது நகைப்புக்குள்ளாகும். பல கேள்விகளை கேட்பார்கள்.
ஆன்மீகத்தை ஆராய்ச்சி செய்யமுடியாது. ஆராய்ச்சி செய்து அதனை வெளியில் சொல்லும் விசயம் கிடையாது. சொல்லவும் முடியாது. அனுபவத்தில் அதனை உணரவேண்டும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment