Followers

Friday, August 2, 2013

ஆன்மீக அனுபவங்கள் 104


வணக்கம் நண்பர்களே!
                    நான் இப்பொழுது அதிகம் இருப்பது அடையார் அலுவலகத்தில் தான் இருக்கிறேன். கொட்டிவாக்கத்திற்க்கு அதிகம் செல்வது கிடையாது. அடையாரில் இருக்கும்பொழுது பெசன்ட்நகர் வழியில் தான் அலுவலகம் இருக்கிறது. 

பெசன்ட்நகரில் மின்மயானம் இருக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து பிணவண்டியாவது பார்த்துவிடுவேன். சென்னையில் உள்ளவர்கள் அதிகபட்சம் உடலை பெசன்ட்நகர் மின்மயானத்திற்க்கு தான் அனுப்புவார்கள் என்று நினைக்கிறேன். அதிகமான பிணவண்டிகள் செல்லுகின்றன. சரி நான் சொல்ல வந்ததை உங்களிடம் சொல்லுகிறேன்.

இப்பொழுது மின்மயானம் வந்ததால் பிணம் எரிப்பது எளிதாக இருக்கிறது. சுத்தமாக இருக்கிறது புகை வெளியி்ல் வருவது இல்லை என்று நினைக்கிறோம். மின்மயானத்தில் எரிப்பது சம்பிராயதங்களுக்கு சரியா என்று பார்க்கலாம். மின்மயானத்தில் எரித்தால் எலும்பு கிடைக்காது. அனைத்தும் சாம்பலாக தான் தருவார்கள் அதனை அப்படியே கரைக்க முடியும். சாதாரணமாக கட்டையில் வைத்து எரித்தால் எலும்புகள் கிடைக்கும். அந்த எலும்பை வைத்து காரியங்கள் செய்யும்பொழுது சடங்குங்களுக்கு பயன்படும். இப்பொழுது சாம்பலை வைத்து தான் சடங்குகள் செய்கிறார்கள்.

எலும்புகள் வைத்து சடங்குங்கள் செய்தால் அதில் ஒரு சில நிகழ்வுகள் நடைபெறுகிறது உண்மை தான். சாம்பலை வைத்து செய்தால் அப்படி நடைபெறவில்லை. இறந்த உடல் தானே அது எப்படி சென்றால் என்ன என்று நினைக்கலாம். அப்படி விட்டுவிடமுடியாது. இறந்த உடலிலும் பல சூட்சமங்கள் இருக்கின்றன.

மின்மயானங்களுக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சாதாரண இடங்களில் ஊருக்கு ஒதுக்குபுறம் இருந்த சுடுகாட்டையும் மனிதர்கள் விட்டுவைக்கவில்லை. அனைத்தையும் பிளாட் போட்டு விற்றால் இப்படி தான் ஆகும். கட்டையை வைத்து ஒதுக்குபுறத்தில் எரிக்கும்பொழுது யாருக்கும் பிரச்சினை இல்லை.

கிராமங்களில் கட்டையை வைத்து எரிக்கிறார்கள். இந்த கட்டையை வைத்து எரிக்கும்பொழுது அதற்கு என்று பல விதிகள் இருக்கி்ன்றன. ஆண்களாக இருந்தால் எட்டு அடி கட்டையை அடுக்கவேண்டும். பெண்களாக இருந்தால் எட்டரை அடி கட்டையை அடுக்க வேண்டும் இது விதி. பெண்களின் உடல் ஆண்களின் உடலை விட எரிக்கும்பொழுது கொஞ்சம் பரவும். அதற்காக அரை அடி கூடுதலாக வைப்பார்கள்.

பிணத்தை சில இடங்களில் புதைக்கவும் செய்கிறார்கள். அவர் அவர்களின் வழி என்னவோ அப்படியே செய்துக்கொள்ளலாம். வீட்டில் இருந்து மற்றும் சுடுகாட்டில் செய்யும் சடங்குகளில் அந்தந்த கோத்தரங்களுக்கு தகுந்தவாறு சடங்குகள் செய்வார்கள். சிவகோத்திரமாக இருந்தால் தில்லை அம்பலம் திருச்சிற்றம்பலம் என்று ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டு அரிசியை போடுவார்கள். இந்த பாடல் பெரிய பாடலாக இருக்கும். வைணவ கோத்திரமாக இருந்தால் கோவிந்தா கோவிந்தா என்று சொல்லுவார்கள். கோவிந்தா என்றால் திரும்பாது என்று அர்த்தம். இது மூன்று எழுத்து மந்திரம். தமிழில் ந் கணக்கில் எடுத்துக்கொள்வது கிடையாது. இந்த உடல் இனி இந்த பூமிக்கு திரும்பாது என்று அர்த்தம் தான் கோவிந்தா மந்திரம்.

மீதியை அடுத்த பதிவில் பார்க்கலாம்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: