வணக்கம் நண்பர்களே!
மூன்று மாதங்களுக்கு முன்பு ஒருவர் அரபுநாட்டில் இருந்து என்னை தொடர்புக்கொண்டு பேசினார். அவரின் குடும்பங்கள் ஒரு பெண் தெய்வத்தை வணங்கி வருகிறார்கள். அவர் ஒரு சோதிடரிடம் பார்க்கும்பொழுது அந்த சோதிடர் அவரிடம் சொல்லுகிறார் உங்களின் குலதெய்வம் வேறு நீங்கள் வணங்கி கொண்டிருப்பது ஒரு ஆத்மாவை தான் உங்களின் குலதெய்வம் உங்களின் ஊரில் இருக்கும் முனிஸ்வரர் என்று சொல்லுகிறார்.
அந்த நபர் இவரின் ஊரில் போய் முனிஸ்வரரை எடுத்துவிட்டார். உடனே அந்த ஆத்மா இவரை போட்டு அந்தப் பாடு படுத்தி எடுக்கிறது. முனிஸ்வரரை வணங்காதே என்னை மட்டும் வணங்கவேண்டும் என்கிறது. இவரின் உடலை அது தாக்குகிறது. இவர் இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று பார்க்கிறார். ஒன்றும் முடியவில்லை. இதில் இணையத்தில் ஒரு குருஜீ ஒருத்தர் இருக்கிறார். அவரையும் தொடர்புக்கொண்டு பார்க்கிறார் அவர் இவரை வைத்தே பல லட்சத்தை சம்பாதித்துவிட்டார். ஆனால் பலன் ஒன்றும் இல்லை.
இந்த குருஜி ஊரில் இருக்கின்ற அத்தனை கர்மங்கள் செய்யும் இடத்திற்க்கும் இவரை போகசொல்லி இருக்கிறார். ஒரு ஆத்மாவை திருப்திபடுத்த தெரியவில்லை என்றால் எதற்கு சந்நியாசி ஆகவேண்டும். ஊரை ஏமாற்றுவது பிழைப்பாக வைத்திருக்கிறார்கள். இவருக்கு ஒன்றுமே நடக்கவில்லை. உடல் நிலை மோசமாக மட்டுமே போய்க்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் ஜாதககதம்பத்தை படித்துவிட்டு என்னை தொடர்புக்கொண்டு விசயத்தை சொன்னார்.
நான் அவரிடம் இன்னும் அரை மணி நேரத்தில் உங்களுக்கு பிரச்சினை குறையும். உங்களுக்கு இரண்டு நாட்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. இரண்டு நாட்களுக்கு பிறகு எனக்கு தேவையான பணத்தை நீங்கள் செலுத்திவிட்டால் நிரந்தரமாக உங்களுக்கு பிரச்சினை இருககாது என்று சொல்லிவிட்டேன். அரை மணி நேரத்தில் எல்லாம் பிரச்சினையை முடித்துவிட்டேன். அவர் இருப்பது அரபுநாட்டில் நான் இருப்பது சென்னையில் பிரச்சினை முடிந்தது. இரண்டு நாட்கள் நன்றாக இருந்தார் இரண்டு நாட்களில் பணம் அனுப்பவில்லை.
நான் அந்த ஆத்மாவிற்க்கு கொடுத்த நேரம் இரண்டு நாட்கள் மட்டுமே பிறகு அது என்ன கேட்கிறது என்று பார்த்து அதற்கு கொடுக்கவேண்டும் அதற்கு செலவு ஆகும். அந்த செலவு அதிகபட்சமாக போனால் மூவாயிரத்தை தாண்டாது. அவர் கஷ்டத்தில் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். பணத்தை அனுப்பவில்லை. இரண்டு நாட்களுக்கு பிறகு பிரச்சினை ஆரம்பம் ஆகிவிட்டது. மறுபடியும் என்னை தொடர்புக்கொள்கிறார். நானும் மீண்டும் இரண்டு நாட்கள் செய்து தருகிறேன். இப்படி மூன்று முறை அவர்க்காக செய்தேன்.
அவரின் கஷ்டகாலம் பணத்தை அனுப்பமுடியவில்லை. மறுபடியும் என்னை தொடர்புக்கொண்டார். இனி என்னை தொடர்புக்கொள்ளாதீர்கள் என்று சொல்லிவி்ட்டேன். எனக்கும் அந்த நேரத்தில் கஷ்டமான ஒரு நிலை தான் என்னால் அவருக்கு என் கையில் இருந்து பணம் போட்டு செய்யமுடியாது. இனி தொடர்புக்கொள்ள வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஏன் என்றால் அவரின் கர்மா அப்படி இருக்கிறது.
இரண்டு வாரத்திற்க்கு முன்பு எனது வங்கி கணக்கில் 1500 ரூபாய் கட்டி இருந்தார். அந்த பணத்தை எடுத்து ஒரு சந்நியாசிக்கு கொடுத்துவிட்டேன். அவர் சொல்லிருந்தது தற்காலிக பரிகாரத்திற்க்காக இந்த பணம் என்று போட்டிருந்தார்.
சரியான நேரத்தில் அது செய்தால் மட்டுமே திருப்திபடுத்தமுடியும் இல்லை என்றால் முடியாத ஒரு காரியமாக அது அமையும்.
அவர் எனக்கு மெயில் அனுப்பி இருந்தார். கடவுளுக்கு கூட பணம் இருந்தால் மட்டுமே செய்கின்றது என்றார். நான் என்ன செய்வது உங்களுக்கு நடத்திக்காட்டுகிறேன். அதற்கு செய்ய வேண்டியதை நான் செய்தால் மட்டுமே அது விலகிவரும். எனது குருநாதர் மற்றும் அம்மனின் பவரால் அது மதித்து விலகி நிற்கிறது. அது என்ன கேட்கிறதோ அதனை செய்ய என்னிடம் பணம் இருந்தால் செய்துக்கொண்டு இருக்கலாம்.
ஒரு செயலை எந்த ஒரு பூஜையும் செய்யாமல் அதனை செய்கிறேன் என்று பார்க்கும்பொழுது நான் யார் என்று அவருக்கு புரிந்து இருக்கும். லட்சகணக்கில் பணத்தை இழந்து உள்ளீர்கள் ஒன்றுமே பணம் வாங்காமல் மூன்று முறை செய்து கொடுத்திருக்கிறேன். என்னை பேசினால் நான் என்ன செய்யமுடியும். நான் ஒன்றும் சந்நியாசி கிடையாது. எனக்கு பணம் தேவை இருக்கிறது. நான் செய்துவிட்டு அதனை காட்டிவிட்டு தான் பணம் கேட்கிறேன். அதுவே முடியாது என்றால் நான் என்ன செய்யமுடியும்.
நீங்கள் ஏழைகளாக இருந்தால் ஒரு பைசா வாங்காமல் செய்துக்கொடுத்துவிடுவேன். பணம் இருந்தால் பணத்தை கேட்பேன். இவருக்கு நடந்தது எல்லாம் செலவு செய்தால் மட்டுமே அதனை வெளியில் எடுக்கமுடியும்.
சந்நியாசிகளுக்கு ஒரு வேண்டுகோள்.
நீங்கள் இந்த உலகத்தி்ன் மிகசிறந்த படைப்பு அதுவும் முழுமை நிறைந்த படைப்பு. நீங்கள் புத்தகத்தை படித்துவிட்டு இருக்க கூடாது அனைத்தும் அனுபவபடிப்பாக இருக்கவேண்டும். உங்களின் பார்வை பட்டலே போதும் அனைத்தும் பறந்துஓடும் அனைத்து கர்மமும் விலகிவிடும் நீங்கள் என்னடா என்றால் இருக்கின்ற அனைத்து பூஜையும் செய்து பணத்தை பிடுங்கவதில்லையே குறியாக இருக்கிறீர்கள். இதில் வேறு இந்து மதத்தை காப்பாற்றுகிறேன் என்று சொல்லிக்கொண்டு திரிவது. உண்மையான ஆன்மீகம் என்ன என்பதை நீங்கள் வாழ்ந்து காட்டவேண்டும் அதனை விட்டுவிட்டு ஊர் மேயக்கூடாது. நீங்கள் வரும் நபர்களை பார்த்து இப்படி நினைப்பது போலவே தோன்றுகிறது வடிவேலு சொல்லுவது போல் நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்டா என்பதுபோலவே இருக்கிறது. தயவு செய்து திருந்துங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment