வணக்கம் நண்பர்களே!
ராகு தசா நடைபெற்று கொண்டு இருக்கும்பொழுது என்ன பரிகாரம் செய்யலாம் என்று இந்த பதிவில் பார்த்துவிடலாம்.
நேற்று ராசிக்கற்களை வைத்து ஒரு பதிவை தந்திருந்தேன். அதனை வைத்தே பரிகாரத்தை தந்துவிடுகிறேன். நீங்கள சரியான கல்தானா என பார்த்து வாங்கி அணிந்துக்கொள்ளுங்கள்.
ராசிகற்களை அணிவதற்க்கு என்று ஒரு விதி உள்ளது அதனை முதலில் பார்த்துவிட்டு பிறகு பரிகாரத்தை பார்க்கலாம்.
பலம் பெற்ற ஒரு கிரகத்தின் தசா நடைபெற்றால் அந்த பலனை மேலும் அதிகரிக்க அந்த கிரகத்தின் கல்லை வாங்கி வலது கையில் அணியவேண்டும்.
தீயகிரகத்தின் தசா நடைபெற்று அந்த தீயகிரகத்தின் தீமை குறைய அதற்கு கல் அணிய வேண்டிருந்தால் இடது கையில் அணியவேண்டும்.
நல்ல கிரகம் வலது கை
தீயகிரகம் இடது கை
பரிகாரம்
ராகுக்கும் குருவிற்க்கும் ஆகாது என்பது தெரியும். குருவின் கல்லான கனபுஷ்பராக கல்லை வாங்கி இடது கையில் அணிந்தால் உங்களுக்கு ராகுவின் பாதிப்பு குறையும்.
உங்களின் ஜாதகத்தில் குரு கிரகம் உங்களுக்கு சாதகமாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு அணிந்துக்கொள்ளுங்கள்.
எச்சரிக்கை
ஒரு கல்லை அணிந்தவுடன் பிரச்சினை ஏற்பட்டால் அந்த கல்லை உடனே கழட்டி வைத்துவிடவேண்டும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment