Followers

Sunday, August 18, 2013

ஆன்மீக அனுபவங்கள் 106


வணக்கம் நண்பர்களே!
                    நமது பதிவில் வரும் ஆன்மீகவிசயங்களை படித்துவிட்டு நாமும் இதனை போல் வரவேண்டும் என்று பல பேர்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஆன்மீகத்திற்க்கு வரவேண்டும் என்ற நினைப்பு வந்தாலே போதுமான ஒன்று. நீங்கள் கண்டிப்பாக அந்த இறையோடு ஒன்ற முடியும். அதே நேரத்தில் ஒரு சில எச்சரிக்கை செய்தியும் உங்களுக்கு சொல்ல நினைக்கிறேன். 

நீங்கள் எங்களை போன்ற செயலில் இறங்கும்பொழுது இளைஞர்களாக இருந்தால் போதும். திருமணம் செய்துக்கொண்டுவிட்டு நான் ஆன்மீகத்தில் இறங்கி சாதனை செய்கிறேன் என்று சொன்னால் உங்களால் ஆன்மீகத்தில் சாதனை செய்யமுடியாது. திருமணத்திற்க்கு முன்பே இந்த சாதனை எல்லாம் செய்துவிட்டு பிறகு நீங்கள் திருமணம் செய்தாலும் பரவாயில்லை ஆனால் திருமணம் முடிந்தபிறகு நான் சாதனை செய்கிறேன் என்று வந்தால் கண்டிப்பாக அவர்களால் இதில் ஈடுபடமுடியாது.

நாங்கள் செய்துக்கொண்டு இருக்கும் வேலை எல்லாம் மிகவும் சிக்கலான ஒன்று. ஒரு தொழிலாக ஆன்மீகத்தை செய்துக்கொண்டு இருக்கும்பொழுது அங்கு பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிருக்கும். ஏதோ ஒன்றை பிறருக்காக செய்யும்பொழுது அந்த நபரை ஒரு மாந்தீரிகவாதி தாக்கியிருக்க கூடும்.

அவரை காப்பாற்ற நீங்கள் நினைப்பீர்கள் அவர்களுக்கு உதவும்பொழுது அந்த மாந்தீரிகவாதி உங்களை தாக்குவான். உங்களை மட்டும் தாக்கமாட்டான் உங்களின் வீட்டில் யார் இருக்கிறார்களோ அவர்களை தாக்குவான். பிறகு உங்களின் குடும்பத்தில் ஒரு நபரை இழந்து  நீங்கள் நிற்கவேண்டிவரும். எல்லாவற்றையும் விட உங்களின் குடும்பம் என்பது முக்கியம் அல்லவா. மாந்தீரிகம் செய்பவர்கள் நம்மை கொல்லாமல் கொல்லுவார்கள்.

நேற்று கூட ஒரு நண்பர் என்னை தொடர்புக்கொண்டு கேட்டார் இதில் இருந்து தப்பிக்க நாங்கள் கற்றுக்கொள்ளலாமே என்று கேட்டுருந்தார். அவரிடம் நான் சொன்னது எப்பொழுது ஒன்றை கற்கிறோமோ அதனை வைத்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது. ஏதாவது செய்ய தோன்றும்.அப்பொழுது நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள் என்று சொல்லிருந்தேன்.

நான் ஒவ்வொன்றையும் கற்றுக்கொண்டது பல காலங்கள் சென்றுவிட்டது. இளமையின் வீரீயத்தில் கற்றுக்கொள்ளும்பொழுது அது எந்த காலத்திலும் நம்மை விட்டு செல்லாது. ஒருவன் முழுமை பெறவேண்டும் என்றால் சரியாக பனிரெண்டு ஆண்டுகள் அவன் பயின்று இருக்கவேண்டும். அப்பொழுது மட்டுமே அவனுக்கு சித்தி கிடைக்கும். 

பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பது தவறு இல்லை. முழுமையடைந்த பிறகு நீ்ங்கள் சம்பாதிக்க நினைக்கவேண்டும் அதனை விட்டு விட்டு முதலிலேயே ஏதாவது செய்து மாட்டிக்கொள்ளகூடாது. 

நாங்கள் செய்வது போல் நீங்களும் வரவேண்டும் என்று நினைக்கிறேன் அதற்கு தகுந்த பயிற்சி செய்துவிட்டு வாருங்கள் வெற்றி பெறமுடியும். இளமையில் நீங்கள் பயின்று இருக்கவேண்டும். திருமணம் முடிந்தபிறகு எந்த ஒரு மந்திரமும் ஒழுங்காக உரு ஏறுவதில்லை. 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: